நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் பெர்மிம் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் மீலாதுன் நபி மாநாடு

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய முஸ்லிம் தேசியப் பேரவையான பெர்மிம் (PERMIM) இமிம் (IMIM), மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் பிரெஸ்மா (PRESMA) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் மீலாதுன் நபி மாநாடு ஆறாவது முறையாக  கோலாலம்பூரிலுள்ள மாட்ரேட் மாநாட்டு மையத்தில் காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. 

May be an image of dais and text

May be an image of dais and text

ஆயிரக்கணக்கான மக்கள் நாடெங்கிலும் இருந்து மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்தனர். 

மாநாட்டை கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய விவகாரத்துறை (MAIWP) தலைவர் டத்தோ சையத் கமாருல்ஸமான் பின் சையத் கபீர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார். 

May be an image of one or more people

தமிழக ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா மெளலவி P.A. காஜா முயீனுத்தீன் பாகவி, பேராசிரியர் டத்தோ டாக்டர் முஹம்மது ஃபாரித் ரவி பின் அப்துல்லாஹ் உட்பட பல்வேறு மார்க்க அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். 

May be an image of text

May be an image of one or more people

அழைப்பு பணியில் பன்னெடுங்காலமாக ஈடுபட்டு வரும் டாக்டர் மன்சூர் மரைக்கானுக்கு மௌலூதுர் ரசூல் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.  


May be an image of one or more people, dais and text

"அறநெறி வாழ்வியல் - அருள்பெற்ற சமூகம்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய உதவிய அனைவருக்கும் மாநாட்டு தலைவரும் பெர்மிம் பேரவையின் தேசியத் தலைவருமான அஸ்மான் ஷா தனது உரையில் நன்றி தெரிவித்துக் கொண்டார். 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset