நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இசையமைப்பாளர் தேவாவுக்கு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு

சென்னை:

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் இறுதிச் சடங்கு அரச மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அவர் நேற்று காலை சென்னையில் காலமானார்.

பிற்பகல் இரண்டரை மணிக்குப் பிறகு அவரது நல்லுடல் அவரது சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்.

சென்னையின் கானா இசையைத் திரைப்படங்களில் பிரபலப்படுத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம், ஆசை, காதல் கோட்டை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு அவர் அமைத்த இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

அவரது மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திரையுலகப் பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset