நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்.ஜே. மிட்டே காலமானார்: 34 வயதில் மரணம்

லாஸ் ஏஞ்சல்ஸ்:

உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான Breaking Bad இல் வால்டர் வைட் ஜூனியர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அமெரிக்க நடிகர் ஆர்.ஜே. மிட்டே , தனது 34ஆவது வயதில் காலமானதாக அவரது பிரதிநிதிகள்  தெரிவித்தனர்.

அவரது மரணத்திற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை. பெருமூளை வாதம் (Cerebral Palsy) எனப்படும் நரம்பியல் பாதிப்புடன் வாழ்ந்து வந்த அவர், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும் சமூக நலப் பணிகளுக்காகவும் குரல் கொடுத்து வந்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஒளிபரப்பான Breaking Bad தொடரில், போதைப்பொருள் பேரரசனாக மாறும் வேதியியல் ஆசிரியர் வால்டர் வைட்டின் மகனாக மிட்டே நடித்தார். இந்தத் தொடரில் வால்டர் வைட் கதாபாத்திரத்தில் நடித்த பிரையன் கிரான்ஸ்டன் உலகளாவிய புகழைப் பெற்றார்.

2008 முதல் 2013 வரை ஐந்து பருவங்களாக ஒளிபரப்பான Breaking Bad, தொலைக்காட்சி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தொடராகப் போற்றப்படுகிறது. 21ஆம் நூற்றாண்டின் சிறந்த தொலைக்காட்சித் தொடர் என தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் இதனைத் தேர்வு செய்திருந்தது.

திரையுலகில் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் சமூக நலப் பணிகளிலும் பங்களித்த மிட்டேவின் மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset