செய்திகள் கலைகள்
ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ராமாயணா’ திரைப்படம் குடியரசுத் தலைவர் மாளிகையில் திரையிடப்படுகிறது
மும்பை:
குடியரசுத் தலைவர் மாளிகையில் ரன்பீர் கபூர், யஷ் நடித்த ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ராமாயணா’ படம் திரையிடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கல், சிச்சோர் படங்களுக்குப் பிரபலமான இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் ‘ராமாயணா’ படம் அதிகப் பொருள் செலவில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகும் ராமாயணா படத்தின் முதல் பாகம், பிரமாண்டமான காட்சிகளுடனும் பிரம்மிக்க வைக்கும் கிராஃபிக்ஸ்களுடன் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உலகளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஆஸ்கர் புகழ் ஏ.ஆர். ரஹ்மானுடன் இன்செப்ஷன், இண்டர்ஸ்டெல்லர் புகழ் - கிறிஸ்டோபர் நோலனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹன்ஸ் ஸிம்மரும் இணைந்து இசையமைத்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2026, 12:28 pm
பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்.ஜே. மிட்டே காலமானார்: 34 வயதில் மரணம்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
