செய்திகள் கலைகள்
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம்: மலேசியாவில் சிறப்பு GALA SCREENING ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது
கோலாலம்பூர்:
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது
மலேசியாவில் ஜெயிலர் 2 படத்தின் சிறப்பு GALA SCREENING நிகழ்ச்சி பிரம்மாண்டமாக TGV SUNWAY VELOCITY இல் நடைபெற்றது.
MALIK STREAMS PRODUCTIONS & DISTRIBUTIONS நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சிறப்பு காட்சியை ரஜினி ரசிகர்களுக் கு விருந்தாக அமைந்தது
இந்த நிகழ்ச்சியில் டத்தோ அப்துல் மாலிக், GREENPACKET நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ வீரா ஷாகுல், ஆகியோர் கலந்து கொண்டனர்
ரசிகர்களின் ஆராவாரத்துடன் நடன படைப்புகள் சிறப்பாக அரங்கேறின. ஊடகவியலாளர்கள், சமூக ஊடக பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து ஜெயிலர் 2 படத்தின் சிறப்பு காட்சிகளை கண்டு களித்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தை இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள வேளையில் அனிருத் இசையமைத்துள்ளார்
நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூரியா, வித்யா பாலன், சூராஜ், யோகி பாபு, நமோ நாராயணன், மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2026, 11:50 am
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது; ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
October 14, 2026, 5:54 pm
ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ராமாயணா’ திரைப்படம் குடியரசுத் தலைவர் மாளிகையில் திரையிடப்படுகிறது
October 13, 2026, 12:28 pm
பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்.ஜே. மிட்டே காலமானார்: 34 வயதில் மரணம்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
