நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது; ரஜினி ரசிகர்கள் உற்சாகம் 

சென்னை: 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படம் இன்று அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது 

ரசிகர்கள் திரையரங்குகளில் ஜெயிலர் 2 படத்தை கண்டு களித்து வருகின்றனர். 

கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தது 

தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

மலேசியாவில் ஜெயிலர் 2 திரப்படத்தை MALIK STREAMS PRODUCTIONS & COORPERATIONS நிறுவனம் வாங்கி வெளியீடு செய்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset