செய்திகள் கலைகள்
என் கையைப் பிடித்து தமிழ்த்திரையுலகில் அறிமுகம் செய்தவர் என் குருநாதர் பாரதிராஜா அவர்கள்: நடிகை ராதிகா சரத்குமார் உருக்கம்
பத்துகேவ்ஸ்:
தமிழ்ச்சினிமாவிற்கு என் கையைப் பிடித்து என்னை அழைத்து வந்து அறிமுகம் செய்தவர் என் குருநாதர் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் என்று தமிழ்ச்சினிமாவின் மூத்த நடிகையும் தமிழ்த்தொடர் ஆளுமையுமான நடிகை ராதிகா சரத்குமார் கூறினார்.
கிழக்கே போகும் இரயில் படம் மூலமாக எனக்கு ACTION, ACTING என்று அனைத்தையும் கற்றுக்கொடுத்தவர் என் இயக்குனர் பாரதிராஜா தான் என்று அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
"என் இனிய தமிழ் மக்களே" என்ற வாசகத்துடன் தமிழ் மக்களின் உணர்வுடனும் வாழ்வுடனும் கலந்திருக்கிறார் இயக்குநர் இமயம் அவர்கள் என்று குறிப்பிட்டார்.
தமிழ்ச்சினிமா இருக்கும் வரை இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் புகழ் நிலைத்துக்கொண்டே இருக்கும் என்று ராதிகா சரத்குமார் கூறினார்.
அவர் அறிமுகம் செய்தவர்களில் நானும் ஒருவராக இருப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
முன்னதாக, மண்வாசனை தந்த பாரதிராஜாவிற்கு முதல் மரியாதை நிகழ்ச்சி பத்துகேவ்ஸ் ஷெங்கா மண்டபத்தில் நடைபெற்றது.
நடிகை ராதிகா சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது குருநாதர் பாரதிராஜாவுடன் பயணித்த திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
