நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சாம்பியன் லீக் கால்பந்து: மெஸ்ஸியின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் எம்பாப்பே

மாட்ரிட்:

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் மிகக் குறைந்த வயதில் 100 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற லியோனல் மெஸ்ஸியின் 11 ஆண்டுகால சாதனையை கிளையன் எம்பாப்பே முறியடித்துள்ளார்.

முன்னதாக, சாம்பியன்ஸ் லீக் தொடரில் 28 வயதில் 100 போட்டிகளைப் பூர்த்தி செய்து லியோனல் மெஸ்ஸி இந்தச் சாதனையைத் தன்வசம் வைத்திருந்தார்.

தற்போது எம்பாப்பே தனது 27 வயதிலேயே 100 சாம்பியன்  லீக் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இதன் மூலம் மெஸ்ஸியின் சாதனையை முறியடித்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset