நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டென்மார்க் பொதுப் பூப்பந்து போட்டி: உலகின் 5-ஆம் நிலை ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய மலேசியாவின் ஹூ பாங் ரோன் - லாய் பேய் ஜிங்

கோலாலம்பூர்:

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் மலேசியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியான ஹூ பாங் ரோன் - லாய் பேய் ஜிங், உலகின் 5-ஆம் நிலை ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

உலகின் 51-ஆம் நிலையில் உள்ள இந்த மலேசிய ஜோடி, தாய்லாந்தின் டெசாபோல் புவாரானுக்ரோ - சுபிசாரா பேவ்சாம்ப்ரான் ஜோடியை அதிர்ச்சித் தோல்விக்கு உள்ளாக்கியது.

டென்மார்க்கின் ஒடென்ஸ் நகரில் உள்ள SJF பேங்க் அரேனாவில் நடைபெற்ற இப்போட்டியில், மலேசிய ஜோடி 21-7, 21-11 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்றது.

வெறும் 24 நிமிடங்களில் வலுவான தாய்லாந்து ஜோடியைச் சுருட்டி, மலேசிய ஆட்டக்காரர்கள் தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம், இவ்விரு ஜோடிகளும் நேருக்கு நேர் மோதிய இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றியைக் கைப்பற்றி சாதனையைச் சமன் செய்துள்ளன.

உலகின் முன்னணி ஜோடிக்கு எதிராக மலேசிய வீரர்கள் வெளிப்படுத்திய இந்த அதிரடி ஆட்டம் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ள பிரான்ஸ் அல்லது ஜப்பான் ஜோடியை எதிர்கொள்ள மலேசிய வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

டென்மார்க் ஓபனில் இவர்களின் இந்த சாதனைப் பயணம் மலேசிய பேட்மிண்டன் வரலாற்றிற்கு மேலும் பெருமை சேர்த்து வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset