நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கடினமான காலங்களை மென்செஸ்டர் யுனைடெட் சமாளிக்கும்: மைக்கல் கேரிக்

லண்டன்:

கடினமான காலங்களை மென்செஸ்டர் யுனைடெட் சமாளிக்கும் என்று அதன் நிர்வாகி மைக்கல் கேரிக் கூறினார்.

தனது அணி இன்னும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இருந்தாலும் நாளை அதிகாலையில் அட்லாட்டிகோ மாட்ரிட்டுடன் மோதவிருக்கும் சாம்பியன் லீக் போட்டிக்கு முன்னதாக, கடினமான காலங்களை அவர்களால் சமாளிக்க முடியும்.

மென்செஸ்டர்  யுனைடெட் அணி, தங்களது முதல் ஆறு பிரிமியர் லீக் போட்டிகளில் இருந்து வெறும் ஆறு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. 

இது, 1986-87 சீசனுக்குப் பிறகு ஒரு லீக் தொடரில் அவர்கள் பெற்ற மிக மோசமான தொடக்கமாகும்.

அந்த சீசனில் இதே காலகட்டத்தில் அவர்கள் வெறும் நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தனர்.

இருப்பினும், கடந்த செப்டம்பரில் ஓல்ட் டிராபோர்டில் நடந்த போட்டியில் அஜர்பைஜான் அணியான சபா எப்கேவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மென்செஸ்டர் யுனைடெட் தங்களது சாம்பியன் லீக் பயணத்தை சிறப்பாகத் தொடங்கியது.

ஆக அடுத்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் தங்களின் முழு திறனை வெளிப்படுத்துவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset