செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண போட்டிக்கு பின் ஓய்வு பெற நினைத்தேன்... ஆனால்: மனம் திறந்த ரொனால்டோ
லிஸ்பன்,
போர்த்துகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கால்பந்து வரலாற்றிலேயே தான்தான் சிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.
போர்த்துகல் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து இந்த சர்ச்சை உருவானது.
நார்வே அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவை மாற்று வீரராகக் களமிறக்கத் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் கடைசி வரை விளையாட வாய்ப்பு பெறவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த ரொனால்டோ, போர்த்துகல் அணியின் முகாமிலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து, போர்த்துகல் கால்பந்து சம்மேளனம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கி, தற்காலிக இடைநீக்கம் விதித்தது.
இந்நிலையில், இது குறித்து பேசிய ரொனால்டோ, தனது ஆட்டத்திறனும் கோல் எண்ணிக்கையும் போதிய அளவில் மதிக்கப்படவில்லை என்று கூறினார்.
மக்கள் எனது தற்போதைய ஆட்டத்திறனையும், நான் அடிக்கும் கோல்களையும் சரியாக மதிப்பதில்லை.
ஆனால், புள்ளிவிவரங்களும் சாதனைகளும் உண்மையை சொல்லும். கால்பந்து வரலாற்றிலேயே நான்தான் சிறந்த வீரர் என்று அவர் தெரிவித்தார்.
2026 உலகக் கிண்ண போட்டியில் போர்த்துகல் அணி வெளியேறியதைத் தொடர்ந்து, சர்வதேசக் கால்பந்திலிருந்து ஓய்வுபெறுவது குறித்து யோசித்ததாகவும், அதற்காக விடைபெறும் கடிதம் ஒன்றைத் தயாரித்திருந்ததாகவும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், போர்த்துகல் கால்பந்து சம்மேளனத் தலைவர் பெட்ரோ புரோன்சாவுடனான உரையாடலுக்கு பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2026, 9:31 am
மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்தை விமர்சித்ததற்காக மார்டினெஸ் மன்னிப்பு கோரினார்
October 15, 2026, 9:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
October 15, 2026, 8:57 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் அபாரம்
October 14, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
October 14, 2026, 9:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
October 13, 2026, 10:09 am
கடினமான காலங்களை மென்செஸ்டர் யுனைடெட் சமாளிக்கும்: மைக்கல் கேரிக்
October 13, 2026, 10:05 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
October 12, 2026, 9:57 am
