நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்தை விமர்சித்ததற்காக  மார்டினெஸ் மன்னிப்பு கோரினார்

லண்டன்:

அட்லாட்டிகோ மாட்ரிட்டிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வீரர் பரிமாற்றச் சந்தையில் முதலீடு செய்யாதது குறித்து கிளப்பின் நிர்வாகத்தை பகிரங்கமாக விமர்சித்ததற்காக மென்செஸ்டர் யுனைடெட் தற்காப்பு வீரர் லிசாண்ட்ரோ மார்டினெஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஸ்பெயினில் நடந்த சாம்பியன் லீக் போட்டியில், இங்கிலாந்தின் இந்த மாபெரும் அணி அட்லாட்டிகோவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 

மேலும், மென்செஸ்டர் யுனைடெட் அணி இந்த சீசனின் பிரிமியர் லீக் பயணத்தை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான சாதனையுடன் தொடங்கியுள்ளது.

கடந்த சீசனில் பிரிமியர் லீக்கில் மென்செஸ்டர் யுனைடெட் மூன்றாவது இடத்தைப் பிடித்து, ஐரோப்பாவின் உயர்மட்டப் போட்டிக்குத் திரும்பிய நிலையில், வீரர் பரிமாற்றச் சாளரத்தில் அணியை வலுப்படுத்த அதிக முதலீடு செய்யப்படும் என்று 100 சதவீதம் எதிர்பார்ப்பதாகக் கூறி, தொழில்நுட்ப இயக்குநர் ஜேசன் வில்காக்ஸை மார்டினெஸ் கடுமையாகச் சாடினார்.

மென்செஸ்டர் யுனைடெட் அணி, கார்லோஸ் பலேபா, யூரி டைல்மேன்ஸ் மற்றும் ஆண்ட்ரே சாண்டோஸ் ஆகிய மூன்று நடுக்கள வீரர்களை சுமார் 811.5 மில்லியன் ரிங்கிட் கட்டணத்தில் வாங்கியது.

ஆனால் அவர்களின் செலவினம் பிரிமியர் லீக்கில் உள்ள சில போட்டியாளர்களை விட மிகவும் குறைவாக இருந்தது என அவர் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset