செய்திகள் மலேசியா
மித்ராவின் 150 மில்லியன் ரிங்கிட் மட்டும் அல்ல; இந்தியர் நலனுக்காக 2027 பட்ஜெட்டில் நிறைய திட்டங்கள் உள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
புத்ராஜெயா:
மித்ராவின் 150 மில்லியன் ரிங்கிட் மட்டும் அல்ல, இந்தியர் நலனுக்காக 2027 பட்ஜெட்டில் நிறைய திட்டங்கள் உள்ளன.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மித்ராவுக்கான நிதி ஒதுக்கீட்டை 150 மில்லியன் ரிங்கிட்டாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உயர்த்தினார்.
இந்த நிதி அதிகரிப்பு உயர் திறன் கொண்ட துறைகளில் இந்திய இளைஞர்களுக்கான திறன் பயிற்சி, வேலை வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்.
மேலும் ஆவ்டோமாசி தொழில்துறை, தொழில்நுட்பம், விமானப் பராமரிப்பு போன்ற துறைகளில் கவனம் செலுத்தப்படும்.
இந்திய இளைஞர்களுக்கு உயர் திறன் கொண்ட வேலைகள், வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.
இதை தவிர்த்து இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்தவும், வருமானத்தை அதிகரிக்கவும், தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை வலுப்படுத்தவும் உதவுவதற்காக டெக்குன் நேஷனல் அமானா இக்தியார் ஆகியவற்றின் நிதிகள் 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
கல்வியைப் பொறுத்தவரை, பாதுகாப்பான, கற்றலுக்கு உகந்த சூழலை வழங்குவதற்காக, குறிப்பாக மோசமான உள்கட்டமைப்பு சிக்கல்களை எதிர்கொள்ளும் தமிழ்ப் பள்ளிகளின் பராமரிப்பு, பழுதுபார்ப்புக்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறைக்கான கல்வி வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஜொகூர் குளுவாங்கில் உள்ள பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளியை முழுமையாக மாற்றி அமைக்கும் திட்டத்தையும் மடானி அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், தேசிய வளர்ச்சிப் போக்கிலிருந்து இந்திய சமூகம் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முழு முன்னெடுப்பும் பிரதிபலிக்கிறது.
மனிதவள அமைச்சில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2026, 5:43 pm
இந்தோனேசியாவில் காட்டுத் தீ நடவடிக்கைகளில் மலேசிய பாமாயில் நிறுவனங்கள் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
October 16, 2026, 4:27 pm
நாட்டிலுள்ள சில மாநிலங்களில் இன்றிரவு 7 மணிவரை பலத்த மழை எச்சரிக்கை: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
October 16, 2026, 4:06 pm
அக்டோபர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் ஆறாவது மாபெரும் மீலாதுன் நபி மாநாடு
October 16, 2026, 3:56 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: பி.கே.ஆர் 9 தொகுதிகளில் போட்டி
October 16, 2026, 12:08 pm
காஜாங் சிறையிலிருந்து வீட்டிற்கு நஜிப் மாற்றப்படுவது குறித்து போலிசாருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை
October 16, 2026, 12:07 pm
நீலாயில் மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
October 16, 2026, 12:07 pm
ஷாரா மரண விசாரணை முடிவுகள்: ஜனவரி 15ஆம் தேதி அறிவிக்கப்படும்
October 16, 2026, 12:06 pm
