செய்திகள் மலேசியா
காட்டுத் தீயை அணைக்க மலேசியாவின் உதவிக்கு பிரபோவோ ஒப்புதல்
ஜாகர்த்தா:
நாட்டில் உள்ள காடுகள், சதுப்பு நிலங்களில் ஏற்படும் தீயை அணைக்க உதவும் வகையில் அண்டை நாடுகளிடமிருந்து உதவியைப் பெறுவதற்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த உதவியைப் பெறுவதற்கான செயல்பாட்டு, தொழில்நுட்ப நடைமுறைகளை தேசிய பேரிடர் மேலாண்மை முகமை இறுதி செய்து வருவதாக வெளியுறவு அமைச்சர் அர்மநாதா நசீர் கூறியதாக அன்டாரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. நமக்குத் தெரிந்தபடி, அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று ஜகார்த்தாவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு அவர் கூறினார்.
இந்தத் தீ தற்போது இந்தோனேசியாவின் பல பகுதிகளையும், ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தையும் கடுமையாகப் பாதித்து வருவதால், பிரபோவோ அதன் வளர்ச்சியை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
வட்டார ஆதரவைக் கோருவதற்கு முன்பு, இந்தோனேசியா பெருமளவிலான உள்நாட்டு வளங்களைத் திரட்டியிருந்தது.
தற்போதைய நிலவரப்படி, தீயணைப்பு வீரர்கள், ராணுவ வீரர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள், உள்ளூர் தன்னார்வலர்கள் உட்பட மொத்தம் 60,177 பணியாளர்கள் தீயைக் கையாளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதிக அபாயம் உள்ள தீ அபாயப் பகுதிகளில் வான்வழி நீர் குண்டுவீச்சு மற்றும் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2026, 5:43 pm
இந்தோனேசியாவில் காட்டுத் தீ நடவடிக்கைகளில் மலேசிய பாமாயில் நிறுவனங்கள் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
October 16, 2026, 4:27 pm
நாட்டிலுள்ள சில மாநிலங்களில் இன்றிரவு 7 மணிவரை பலத்த மழை எச்சரிக்கை: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
October 16, 2026, 4:06 pm
அக்டோபர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் ஆறாவது மாபெரும் மீலாதுன் நபி மாநாடு
October 16, 2026, 3:56 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: பி.கே.ஆர் 9 தொகுதிகளில் போட்டி
October 16, 2026, 12:08 pm
காஜாங் சிறையிலிருந்து வீட்டிற்கு நஜிப் மாற்றப்படுவது குறித்து போலிசாருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை
October 16, 2026, 12:07 pm
நீலாயில் மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
October 16, 2026, 12:07 pm
