செய்திகள் மலேசியா
ஷாரா மரண விசாரணை முடிவுகள்: ஜனவரி 15ஆம் தேதி அறிவிக்கப்படும்
கோத்தாபாலு:
கோத்தா கினபாலு மரண விசாரணை நீதிமன்றம், ஷாரா கைரினா மகாதீரின் மரணம் குறித்த விசாரணையின் முடிவுகளை ஜனவரி 15 அன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, டிசம்பர் 15ஆம் தேதிக்கு முன்னரோ அல்லது அன்றோ தங்களது எழுத்துப்பூர்வமான சமர்ப்பிப்புகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்ட பின்னர், மரண விசாரணை அதிகாரி அமீர் ஷா அமீர் இந்தத் தேதியை நிர்ணயித்தார்.
96 நாட்கள் நீடித்த இந்த விசாரணை நடவடிக்கைகள் நேற்று முடிவடைந்தது.
பாப்பரில் உள்ள தனது பள்ளி விடுதியில் ஒரு வடிகால் அருகே மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, ஷாரா ஜூலை 17, 2025 அன்று கோத்தா கினபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரது உடல் ஆகஸ்ட் 9 அன்று தோண்டி எடுக்கப்பட்டு, மறுநாள் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறையால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 20 அன்று, ஷாராவை நோக்கி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், மாணவர்கள் ஏ, பி, சி, டி, இ என அறியப்படும் ஐந்து சிறார்கள் மீது கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2026, 5:43 pm
இந்தோனேசியாவில் காட்டுத் தீ நடவடிக்கைகளில் மலேசிய பாமாயில் நிறுவனங்கள் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
October 16, 2026, 4:27 pm
நாட்டிலுள்ள சில மாநிலங்களில் இன்றிரவு 7 மணிவரை பலத்த மழை எச்சரிக்கை: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
October 16, 2026, 4:06 pm
அக்டோபர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் ஆறாவது மாபெரும் மீலாதுன் நபி மாநாடு
October 16, 2026, 3:56 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: பி.கே.ஆர் 9 தொகுதிகளில் போட்டி
October 16, 2026, 12:08 pm
காஜாங் சிறையிலிருந்து வீட்டிற்கு நஜிப் மாற்றப்படுவது குறித்து போலிசாருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை
October 16, 2026, 12:07 pm
நீலாயில் மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
October 16, 2026, 12:06 pm
