நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2027இல் அடிப்படை சம்பளம் 2,000 ரிங்கிட்டாக உயர்வு; மலேசிய ஆரம்ப அடிப்படை சம்பள தரநிலையை பின்பற்றப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா:

மலேசிய ஆரம்ப அடிப்படை சம்பள தரநிலையை பின்பற்றியே அடிப்படை சம்பளம் 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதில் அடுத்தாண்டு ஜூன் மாதம் முதல் அடிப்படை சம்பளம் 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

பிரதமரின் அறிவிப்பு 40 மில்லியன் தொழிலாளர் வர்கத்தினருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

அதே வேளையில் ஒரு சில அதிருப்திகளும் எழுந்துள்ளன.

இருந்த போதிலும் தொழிலாளர்கள், முதலாளிகள் என அனைவரின் நலன் காப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

அதன் அடிப்படையில் 50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான vaருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தொடக்கமாக, பகுதித் திறன் கொண்ட தொழிலாளர்கள், பட்டதாரிகளுக்கு மாதத்திற்கு 2,500 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், தொழிலாளர்களின் வருமானக் கட்டமைப்பில் ஒரு சீர்திருத்தத்தையும் அரசாங்கம் அறிவித்தது.

இந்த முழுமையான முன்னெடுப்பும் பிரதமரின் தலைமையின் கீழ் ஒரு தெளிவான திசையைக் காட்டுகிறது.

அதாவது, நாட்டின் உயர் மதிப்புப் பொருளாதாரத்தை நோக்கிய இலட்சியத்திற்கு இணங்க, அதிகத் திறன் கொண்ட, அதிக வருமானம் ஈட்டும், பாதுகாக்கப்பட்ட மலேசியத் தொழிலாளர் சக்தியை உருவாக்குவதே அந்த இலக்காகும்.

மேலும் இந்த சம்பள உயர்வு என்பது MASCO எனப்படும் மலேசிய ஆரம்ப அடிப்படை சம்பள தரநிலையை பின்பற்றப்படும்.

MASCO 1 முதல் 3 வரையிலான சம்பள வழிகாட்டுதல்கள், பட்டதாரி கணக்கெடுப்பின் முடிவுகளிலிருந்து தீர்மானிக்கப்படுகின்றன.

இந்த சம்பள வழிகாட்டுதல், MASCO 4 முதல் 8 வரையிலான சம்பள வழிகாட்டுதல்களுக்குத் துணையாக, முற்போக்கான சம்பளக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட தொடக்க அடிப்படை சம்பள வழிகாட்டுதலையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

இதன் செயலாக்கம் முறையாகவும், முதலாளிகள் ஊழியர்களுக்குத் தெளிவான அடிப்படையுடனும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக மனிதவள அமைச்சு MASCO-வை அடிப்படையாகக் கொண்ட தொடக்க அடிப்படை சம்பள வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள், வேலையின் வகை மற்றும் தகுதி நிலைக்கு ஏற்ப, தொடக்க அடிப்படை சம்பளத்திற்கான ஒரு விரிவான விளக்கத்தை வழங்கும்.

மனிதவள அமைச்சின் eMASCO இணையத் தளம் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்படுவதைக் கண்காணிப்பதற்கான ஒரு வழிமுறையையும் விவரிக்கிறது.

இந்த வழிமுறை, பின்வருவனவற்றை உறுதி செய்வதன் மூலம் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தும்.

மனிதவள அமைச்சில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset