நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத் தேர்தல்: பி.கே.ஆர் 9 தொகுதிகளில் போட்டி

மலாக்கா: 

16ஆவது மலாக்கா மாநில தேர்தலில் பிகேஆர் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக உறுதி செய்துள்ளது. 

கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக அதன் பொதுச்செயலாளர் புசியா சாலே தெரிவித்தார்.

தேர்தலில் திறம்பட செயலாற்ற கட்சியின் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரவிருக்கும் தேர்தலில் பி.கே.ஆர் மிகவும் வலுவான போட்டியைக் கொடுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலைக் கட்சியின் தலைவரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான அன்வார் இப்ராஹிம் வெளியிடுவார். 

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வாக்களிப்பு தினம் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலாக்கா மாநிலச் சட்டமன்றம் மொத்தம் 28 தொகுதிகளைக் கொண்டதாகும்.

கடந்த தேர்தலில் பார்சிபான் நேஷனல் 21 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset