செய்திகள் மலேசியா
அக்டோபர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் ஆறாவது மாபெரும் மீலாதுன் நபி மாநாடு
கோலாலம்பூர்:
மலேசிய இந்திய முஸ்லிம் தேசியப் பேரவையான பெர்மிம் (PERMIM) இமிம் (IMIM), மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் பிரெஸ்மா (PRESMA) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் மீலாதுன் நபி மாநாடு ஆறாவது முறையாக எதிர்வரும் வரும் 18 அக்டோபர் 2026 (ஞாயிற்றுக்கிழமை) கோலாலம்பூரிலுள்ள மாட்ரேட் மாநாட்டு மையத்தில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.
"அறநெறி வாழ்வியல் - அருள்பெற்ற சமூகம்" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், அண்ணல் நபிகளார் அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு குடும்பம், சமூக ஒற்றுமை, இளைஞர்களின் எதிர்காலம், இஸ்லாமோஃபோபியா, செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் உள்ளிட்ட சமகாலப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது என்று பெர்மிம் தலைவர் அஸ்மான் ஷா கூறினார்.
இந்த மாநாட்டில் மஜ்லிஸ் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய விவகாரத்துறை (MAIWP) தலைவர் டத்தோ சையத் கமாருல்ஸமான் பின் சையத் கபீர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.
தமிழக ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா மெளலவி P.A. காஜா முயீனுத்தீன் பாகவி, மெளலானா ஷெய்க் ஹபீப் அலி ஜைனுல் ஆபிதீன் அல் ஹாமித், மெளலவி ஸய்யித் அலவி ஸாலிஹ் மெளலானா, உஸ்தாத் அல்-ஹாஃபிழ் டாக்டர் ஸயீத் இப்ராஹீம் அல்-புஹாரி, உஸ்தாத் முஹம்மது ஹஸ்ஸான் நிஜாமி அல்-புஹாரி உரையாற்ற இருக்கிறார்கள்.
மேலும் டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை, பேராசிரியர் டத்தோ டாக்டர் முஹம்மது ஃபாரித் ரவி பின் அப்துல்லாஹ், உஸ்தாத் டாக்டர் பஷீர் பின் முஹம்மது அல்-அஸ்ஹரி
ஆகியோரும் பேச இருக்கின்றார்கள்.
குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் பெருந்திரளாகக் கலந்து கொண்டு இந்த மாபெரும் மீலாதுன் நபி மாநாட்டைச் சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழு சார்பில் முஹம்மது அஸ்மான் ஷா கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் இருந்து ஷெட்டல் பேருந்து சேவை வழங்கப்படும் என்று பெர்மிம் பொதுச் செயலாளர் ஆதம் மாலிக் தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 16, 2026, 5:43 pm
இந்தோனேசியாவில் காட்டுத் தீ நடவடிக்கைகளில் மலேசிய பாமாயில் நிறுவனங்கள் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
October 16, 2026, 4:27 pm
நாட்டிலுள்ள சில மாநிலங்களில் இன்றிரவு 7 மணிவரை பலத்த மழை எச்சரிக்கை: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
October 16, 2026, 3:56 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: பி.கே.ஆர் 9 தொகுதிகளில் போட்டி
October 16, 2026, 12:08 pm
காஜாங் சிறையிலிருந்து வீட்டிற்கு நஜிப் மாற்றப்படுவது குறித்து போலிசாருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை
October 16, 2026, 12:07 pm
நீலாயில் மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
October 16, 2026, 12:07 pm
ஷாரா மரண விசாரணை முடிவுகள்: ஜனவரி 15ஆம் தேதி அறிவிக்கப்படும்
October 16, 2026, 12:06 pm
