நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாயில் மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்

நீலாய்:

நீலாய் அருகே உள்ள ஒரு அரசு ஊழியரின் இல்லத்தில் தனது மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு உதவுவதற்காக, சந்தேக நபர் இன்று முதல் அக்டோபர் 22 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நீலாய்  போலிஸ் தலைவர் ஜொஹரி யஹ்யா கூறினார்.

30 வயதுடைய அந்த சந்தேக நபர், நீதிமன்றக் காவல் மனுவுக்காக இன்று காலை செரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

முன்னதாக, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் அதிகாரி ஒருவர், தனது கணவரால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் நிலையில், நேற்று இரவு நிலாய், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய குடியிருப்பில் இறந்து கிடந்ததாக நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் அல்சாப்னி அஹ்மத் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும், இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset