நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

தீக்குண்டத்தார் அனைவரும் ஏன் மரணத்தை தேர்ந்தெடுத்தார்கள்? - வெள்ளிச் சிந்தனை

1. தீக்குண்டத்தார் அனைவரும் ஏன் மரணத்தை தேர்ந்தெடுத்தார்கள்?

அந்த கொடுங்கோல் அரசனிடம் அவர்கள் பொய் சொல்லியிருக்கலாம், நம்பிக்கையை மறைத்திருக்கலாம், மௌனமாக இருந்திருக்கலாம்.

அவர்களின் மரணத்தால் மார்க்கத்திற்குப் பயன் கிடைத்ததா?

2. கொடுங்கோலன் நம்ரூதிடம் இப்ராஹீம் நபி ஏன் சரணடையவில்லை?

3. கொதிக்கும் எண்ணெயில் முஸ்லிம் கைதிகள் உருகுவதைக் காட்டி சித்திரவதை செய்த ரோமானிய அரசனிடம் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) ஏன் சரணடையவில்லை?

4. கொடுங்கோலன் ஹஜ்ஜாஜுக்கு சவால் விடுத்த, பேரறிஞர் ஸயீத் இப்னு ஜுபைர் (ரலி) உண்மை பேசியதால் கொல்லப்பட்டார். அவர் ஏன் சரணடையவில்லை?

5. ஒரே நாளில் 1,800 முஸ்லிம்களைக் கொன்று, இமாம் அவ்ஸாயி அவர்களைக் கொல்லவும் தயங்காத அப்பாஸிய ஆட்சியாளரிடம் இமாம் அவ்ஸாயி ஏன் சரணடையவில்லை?

6. ஆட்சியாளரின் அநீதியையும், சிறையில் நீண்ட சிறைவாசத்தையும் அனுபவித்து மரணித்த இப்னு தைமிய்யா ஏன் பின்வாங்கவில்லை?

7. மம்லூக்குகளுக்கு முன் உண்மையைப் பேசுவதிலிருந்து அல்இஸ் இப்னு அப்துல் சலாம் ஏன் பின்வாங்கவில்லை?

8. குர்ஆன் படைக்கப்பட்டது எனும் சோதனையின்போது இமாம் அஹ்மத் (ரஹ்) ஏன் பின்வாங்கவில்லை?

9. நாசரின் தூக்குமேடைக்கு முன் சையித் குத்ப் ஏன் பின்வாங்கவில்லை? விடுதலை செய்யுமாறு முறையிட்டாலே போதும் எனும் நிலையிலும் தூக்குக் கயிற்றை அவர் ஏன் முத்தமிட்டார்?

இவர்களின் மரணத்தால் மார்க்கத்திற்கு பயன் கிடைத்ததா?

இவர்கள் பின்வாங்கியிருந்தால், இவர்களிடமிருந்து வெற்றித் தலைமுறை உருவாகியிருக்குமா? இல்லை! ஒருபோதும் இல்லை!

மாறாக, உண்மையைப் பேச அஞ்சி, பின்வாங்கும் ஒரு தலைமுறை தோன்றியிருக்கும். 

அல்லாஹ்வுக்காக உண்மை பேச வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு, அநீதியுடனும் இறைமறுப்புடனும் இணங்கி வாழ முயற்சிக்கும் ஒரு திராணியற்ற தலைமுறைதான் உருவாகியிருக்கும்.

இவ்வாறு சிறுக சிறுக  மார்க்கம் தொலைந்து போயிருக்கும்.

விளைவுகள் எதுவாக இருந்தாலும், உண்மையின் மீது உறுதியாக நின்று அதைப் பிரகடனப்படுத்துவதில்தான் வெற்றி அடங்கியுள்ளது.

இறை நம்பிக்கையைப் பொறுத்தவரை நடுநிலை என்று எதுவும் இல்லை. இருக்கவும் கூடாது!

ஒன்று நீங்கள் சத்தியத்தின் மீது உறுதியாக நின்று மரணிக்க வேண்டும். அதுவே வெற்றி!

அல்லது சமரசம் செய்துகொண்டு வாழவேண்டும். அதுவே எல்லாத் தோல்விகளுக்கும் மூலகாரணம்!

கொண்ட கொள்கைக்காக மரணத்தை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பின்னர் மார்க்கம் தொலைந்து போனதா?

இல்லை! அவர்கள் பிரகடனம் செய்த உண்மை இன்றும் நிலைத்திருக்கிறது.

ஆம். இறைமார்க்கம் என்றும் நிலைத்து நிற்கும். இதுவே உண்மை!

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset