நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை

உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்?

திருமறை கூறுகிறது:

"(நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுங்கள்: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கும் நீருக்கு ஒப்பாக இருக்கிறது”. (18:45)

உலக வாழ்க்கையை அல்லாஹ், தண்ணீருடன் ஒப்பிடுவதற்கான காரணங்கள்:
தண்ணீர் ஒரே இடத்தில் தங்குவதில்லை.

அவ்வாறே இவ்வுலகமும் ஒரே நிலையில் நிலைத்து நிற்பதில்லை.

தண்ணீர் (ஓடி மறைந்து) சென்றுவிடுகிறது, எக்காலமும் நிரந்தரமாக தங்குவதில்லை.
அவ்வாறே இவ்வுலகமும் அழிந்துவிடுகிறது, நிலைத்து நிற்பதில்லை.

தண்ணீருக்குள் நுழைபவர் எவரும் நனையாமல் இருப்பதில்லை.

அவ்வாறே இவ்வுலக சோதனைகளிலிருந்தும் அதன் தீங்குகளிலிருந்தும் யாரும் தப்ப முடியாது.
தண்ணீர் தேவையான அளவு இருக்கும்போது பயனுள்ளதாகவும் தாவரங்களை முளைக்கச் செய்வதாகவும் அமைகிறது. ஆனால், எல்லை மீறி பெருக்கெடுக்கும்போது தீங்கானதாகவும் அழிவை ஏற்படுத்துவதாகவும் மாறிவிடுகிறது.

அவ்வாறே உலகமும் தேவைக்கேற்ப போதுமான அளவுக்கு இருப்பது பயன் தரும். வரம்பு மீறிய செல்வம் தீமை பயக்கும்.

இறைவா! தண்ணீரையும் உலகத்தையும் பயன்மிக்கதாக ஆக்குவாயாக!

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset