செய்திகள் சிந்தனைகள்
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
பாரம்பரிய உணவுகளுக்குப் பதிலாக; பதப்படுத்தப்பட்ட, அதிக கலோரி கொண்ட உணவுகள் அதிகரித்து வருவதால், ஐரோப்பாவிலேயே அதிக உடல் எடை கொண்ட குழந்தைகளில் இத்தாலியக் குழந்தைகளும் அடங்குவர்.
தரமற்ற உணவு, குறைந்த உடல் செயல்பாடு, உடல் பருமன் குறித்த விழிப்புணர்வின்மை ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இத்தாலி தற்போது உடல் பருமனை ஒரு நாள்பட்ட நோயாகக் கருதி சிகிச்சை அளித்து வருகிறது. அத்துடன் அதிகரித்து வரும் குழந்தைகளின் உடல் பருமனை சமாளிக்க புதிய உத்திகளையும் சோதித்து வருகிறது.
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனை மட்டுமல்ல; மாறாக அது பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் காரணியும் ஆகும்.
இஸ்லாம் மிதமான வாழ்க்கை முறையை வலியுறுத்தும் மார்க்கம். அந்த வகையில் உடல் பருமன், ஆரோக்கியம் குறித்தும் மிகத் தெளிவான வழிகாட்டல்களை வழங்குகிறது.
"உண்ணுங்கள், பருகுங்கள் விரயம் செய்யாதீர்கள்” என்கிறது.
"வயிற்றில் மூன்றில் ஒரு பங்கு உணவிற்கும், மூன்றில் ஒரு பங்கு நீருக்கும், மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு காற்றுக்கும் ஒதுக்கப்பட வேண்டும்” என்கிறது.
"உடல் ஆரோக்கியம் ஓர் அமானிதம்” என்கிறது.
உமர் (ரலி) கூறினார்: "மக்களே! சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாவதைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அது தொழுகையில் சோம்பலை ஏற்படுத்தும். உடலுக்கு ஆபத்தை வரவழைக்கும். நோயை அழைத்து வரும்”.
வயிறு பருத்த ஒருவரைப் பார்த்த உமர் (ரலி), "இது என்ன?” என்று அவருடைய பெருத்த தொப்பையைச் சுட்டிக்காட்டிக் கேட்டார்.
அவர்: "அல்லாஹ்வின் அருள்”
உடனே உமர் (ரலி): "இல்லை. இது அல்லாஹ்வின் வேதனை”. (அல்கலீஃபதுல் ஃபாரூக்)
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் - வெள்ளிச் சிந்தனை
August 2, 2026, 6:46 am
