நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

சியோனிஸ்ட்டுகளின் தேர்தல் சதி நாடகம்தாம் விமானக் கத்திக் குத்து

சர்வதேச அரசியலின் திரைமறைவில் எத்தனையோ சதித்திட்டங்கள் தீட்டப்பட்டாலும், சில நிகழ்வுகள் வெளிவரும்போதே அது ஒரு அப்பட்டமான நாடகம் என்பது தெளிவாகிவிடும். 

அப்படித்தான், சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி அரசியல் விவாதங்களிலும் இன்று உலா வரும் இந்த வான்வழிச் சம்பவம், உண்மையானதொரு விமானக் கடத்தல் அல்ல; மாறாக, திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு அரசியல் நாடகம் என்பது இதன் ஒவ்வொரு அடியிலும் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச அரங்கில் இஸ்ரேலின் பிம்பம் பலத்த அடி வாங்கியுள்ளது. 

உலக நாடுகளின் கணக்கில் தங்களை மீண்டும் "பாதிக்கப்பட்டவர்களாக" காட்டிக்கொள்ள அவர்கள் எதையாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில்தான், எப்போதோ சியோனிஸ்டுகள் எச்சரித்தது போல, மீண்டும் ஒரு "9/11" பாணி தாக்குதல் நடக்கும் என்ற கதையோட்டத்துடன் ஒரு சம்பவம் அரங்கேற்றப்படுகிறது. 

ஆனால், இந்த வான்வழிச் சம்பவத்தில் உள்ள ஒவ்வொரு துளியும் ஒரு மோசமான ஹாலிவுட் திரைக்கதை போலவும், பல கேள்விகளையும் ஆபத்தான சந்தேகங்களையும் எழுப்பும் நாடகமாகவும் மட்டுமே மிளிர்கிறது.

இந்தச் சம்பவத்தின் கதையோட்டத்தை ஒருமுறை உற்று நோக்கினால், இது எந்தவொரு நடைமுறைத் தர்க்கத்திற்கும் (Logic) பொருந்தாத, ஒரு மோசமான ஹாலிவுட் சினிமா போல இருப்பது புரியும்:

முதலில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

174 பயணிகளுடன் இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானம், விமானத்தில் ஒரு பிரதான பைலட்டும், ஒரு துணை பைலட்டும் இருக்கிறார்கள். பிரதான பைலட் எமிரேட் நாட்டைச் சேர்ந்தவர்( இந்தியன்) என்றும், துணை பைலட் ஓமான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

ஜோர்தான் வான் எல்லையை நோக்கி திடீரெனத் திசை திருப்பப்படுகிறது. இன்னும் ஒரு மணி நேரப் பயணமே எஞ்சியிருந்த நிலையில் இந்த மாற்றம் அரங்கேறுகிறது.

திடீர் அபாயச் சைரன் ஒலிக்க, அவசரக் கதவு திறக்கப்படுகிறது. பைலட் பலத்த காயங்களுடன் துணை விமானியுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.

விமானத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் இஸ்ரேலிய யூதர்கள் ஆவர். கட்டாய ராணுவப் பயிற்சி பெற்ற அவர்கள், உடனடியாகச் செயல்பட்டு ஓமானைச் சேர்ந்த துணை விமானியைக் கட்டுக்குள் கொண்டுவருகின்றனர்.

அவசரத் தரையிறக்கத்திற்காகச் சவூதி அரேபியா விமான நிலையத்தின் அனுமதி பெறப்படுகிறது. 

தகவல் அறிந்த 40 நிமிடங்களுக்குள்ளாகவே, இஸ்ரேலின் இரண்டு ராணுவ விமானங்கள் சவூதி வான்வெளியில் நுழைந்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகின்றன.

காயமடைந்த பிரதான பைலட்டுக்குப் பதிலாக விமானப் பயிற்சி பெற்ற யூதப் பயணி ஒருவர் விமானத்தைச் பாதுகாப்பாகத் தரையிறக்குகிறார்.

அடுத்து அரங்கேற்றப்படும் கதைதான் உச்ச கட்ட நகைமுரண். 

ஓமான் நாட்டைச் சேர்ந்த துணை பைலட் திடீரென விமானத்தைக் கடத்தி, அதை வீழ்த்தப் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். இதற்காக அவர் எமிரேட் நாட்டைச் சேர்ந்தந்த இந்திய பிரதான பைலட்டைக் கத்தியால் குத்துகிறாராம்.

அதில் கத்திக் குத்துக்கு ஆளான இந்தியக் குடிமகனும், மும்பையைச் சேர்ந்தவருமான ஸ்மித் மச்சார் (Smit Machchhar) விமானத்தின் cockpit தரையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகக் கூறப்படும் கதையின் திரைக்கதை இப்போது மேலும் சூடுபிடிக்கிறது.

இதற்கடுத்து சொல்லப்படும் கதைகளை நம்புவதற்கு மிகக் குறைந்த IQ லெவல் கொண்டவர்கள் போல் கண்மூடித்தனமாக நம்பும் மனநிலை வேண்டும்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அந்த ஜெட் விமானம் 30 வினாடிகளுக்குள் சுமார் 14,000 அடி உயரம் வரை (சுமார் 4,267 மீட்டர்) செங்குத்தாகக் கீழே விழுகிறது!

இரத்த வெள்ளத்தில் Cockpit தரையில் கிடந்தாலும், ஸ்மித் மச்சாரால் சுதாரித்துக்கொண்டு Cockpit கதவைத் திறக்கும் வெளியீட்டுப் பொத்தானை (release) கிளிக் செய்ய முடிகிறது.

பொதுவாக ஒரு விமானத்தின் Cockpit கதவை உள்ளிருந்து உடைத்துக்கொண்டு பயணிகள் யாரும் உள்ளே நுழைவது என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒன்று.

இது சாத்தியமில்லை என்று புரிந்தவுடன் கதையை மாற்றுகிறார்கள். கத்திக் குத்து வாங்கிய பைலட், ஏதோ மிராக்கிள் ஜேம்ஸ் பாண்ட் மாதிரி தனது காலால் எமர்ஜென்சி கதவைத் திறந்து, பயணிகளை உள்ளே வரச் செய்தாராம்!

கதவு திறந்ததும், விமானத்தில் இருந்த பயணிகளும் ஊழியர்களும் உள்ளே நுழைந்து அந்தத் தாக்குதல்காரரை மடக்கிப் பிடித்துக் கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். இதன் மூலம் விமானத்தில் இருந்த 174 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

அப்போது, பயணிகளில் ஒருவராக ரகசியமாக (Civilian உடையில்) வந்திருந்த ஒரு off duty இஸ்ரேலிய பைலட் திடீரென முளைத்து வந்து நிலைமையைச் சமாளிக்கிறார்.

இந்த நாடகத்தின் உச்சமாக, அந்தத் துணை பைலட் "அல்லாகு அக்பர்" என்று கத்திக் கொண்டே விமானத்தைக் கடத்தியதாகக் கதை அளக்கிறார்கள்.

36,000 உயரத்தில் விமானம் தலைகீழாகக் கவிழும் சூழலில், கத்திக் குத்து வாங்கிய ஒரு பைலட் இரத்தக் காயத்துடன் திடீரென எழுந்து கதவைத் திறப்பதும், பயணிகள் உடனே உள்ளே பாய்ந்து தாக்குதல்காரரை அடக்குவதும் நடைமுறையில் சாத்தியமா?

36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் ஒரு விமானத்தில்,Cockpit  கதவு திடீரெனத் திறக்கப்படுவதும், கத்திக் குத்து வாங்கிய விமானி இரத்தக் காயங்களுடன் போராடிக் கொண்டே கதவைத் திறப்பதும், உடனே பயணிகள் உள்ளே பாய்ந்து எதிரியை அடக்குவதும் சீனிமாவில் நடக்கலாம், நிஜ வாழ்க்கையில் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை. 

நவீன விமானங்களின் பாதுகாப்பு அமைப்புகள் இத்தகைய எளிமையான மீறல்களை அனுமதிக்கவே செய்யாது.

அது அவ்வாறு இருக்கட்டும்.

அதன்பின்னர் காயமடைந்த அந்த விமானத்தை சவூதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் தரையிறக்குகிறார்கள்.

இங்குதான் பெரிய முரண் உள்ளது .
சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் எந்தவித வெளிப்படையான உறவும் இல்லாத நிலையில், அவசரமாக இந்த விமானம் அங்கு எப்படி தரையிறங்க அனுமதி பெற்றது?

இதைக் கேள்விப்பட்ட பெஞ்சமின் நெதன்யாகு, "இதோ இன்னொரு 9/11! உலகமே பாருங்கள்!" என்று பதற்றத்தை உருவாக்கத் துடிக்கிறார். 

ஆனால், உண்மையில் அங்கே நடந்தது என்ன? 

அது ஒரு தீவிரவாதத் தாக்குதலும் அல்ல, விமானக் கடத்தலும் அல்ல; மாறாக, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு பொய் நாடகம் என்பதே நிதர்சனம்.

சவூதி அரேபியாவின் வடமேற்கு நகரமான தபூக்கில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் ஸ்மித் மச்சார் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் உடனடியாக எக்ஸ் (X) தளத்தில் ஸ்மித் மச்சாரை "ஹீரோ" என்று புகழ்ந்து தள்ளுகின்றனர். 

மோடி தனது பதிவில், "கடுமையான காயங்களுக்கு மத்தியிலும் அவர் காட்டிய தைரியம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது" என்று பாராட்டுகிறார்.

இந்தியாவில் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச (உபி) தேர்தலை இலக்காகக் கொண்டு, ஒரு இந்தியக் குடிமகன் (மும்பையைச் சேர்ந்த ஸ்மித் மச்சார்) Captain Smit Machchhar வெளிநாட்டில் சாகசம் செய்து சாதனை புரிந்ததாகச் சித்தரித்து, தேசியவாத உணர்வைத் தூண்டி வாக்குவங்கியை ஈர்க்கும் தந்திரமே இது. 

(ஆனால் இவர் ஒரு “ ரா” வின் முகவர் என்பது வேறுவிடயம்)

பிரதமர் மோடி உடனடியாக களத்தில் இறங்கி பாராட்டுத் தெரிவிப்பதன் பின்னணியில் இந்த அரசியல் கணக்குகள் தெளிவாக உள்ளன.

அக்டோபர் 7-க்குப் பின் உலகளவில் தனிமைப்படுத்தப்பட்ட இஸ்ரேலுக்கு, தங்களை மீண்டும் பரிதாபத்திற்குரியவர்களாகவும், தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆளானவர்களாகவும் காட்டிக்கொள்ள இது போன்றதொரு "False Flag" (போலித் தாக்குதல்) நாடகம் தேவையாக இருந்தது.

நெதன்யாகுவின் அரசியல் உயிர்வாழ்விற்கும், மோடியின் தேர்தல் வெற்றிகளுக்கும் இது போன்ற சினிமாத்தனமான கதைகள் அவசியமாகின்றன. 

சவூதி பூமியில் அனுமதி பெற்று விமானம் இறங்குவது முதல், ஜேம்ஸ் பாண்ட் பாணியில் cockpit கதவு திறக்கப்பட்டது வரை அனைத்துமே திட்டமிடப்பட்ட ஒரு தேர்தல் நாடகமே தவிர வேறில்லை.

- முகிந்தன் துரை இராஜசிங்கம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset