நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

சிங்கத்தின் அருகில் நாய்கள் கூத்தாடுவதால்... வெள்ளிச் சிந்தனை

"சிங்கத்தின் அருகில் நாய்கள் கூத்தாடுவதால்…
காலத்தின் துரோகத்தைக் கண்டு வருந்தாதே!

அவை அப்படி கூத்தாடுவதால்…
தங்கள் எஜமானை விட மேலானவை என்று நினைக்காதே!

சிங்கங்கள் எப்போதும் சிங்கங்களே!
நாய்கள் எப்போதும் நாய்கள்தான்!

காடுகளில் சிங்கங்கள் பட்டினி கிடந்து சாகின்றன!
நாய்களோ ஆட்டுக்குட்டிகளின் இறைச்சியை தின்று மகிழ்கின்றன!

அறிவற்றவன் பட்டுப் படுக்கையில் உறங்குகிறான்!
அறிஞனோ மண்ணையே படுக்கையாக்கி மகிழ்கிறான்!”

(தீவானுஷ் ஷாஃபிஈ எனும் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பில் இமாம் ஷாஃபி - ரஹ்)

சமூகத்தில் தகுதியற்றவர்களும் கீழ்மக்களும் தற்காலிகமாக அதிகாரத்தையோ அல்லது புகழையோ பெற்று உயர்ந்தவர்கள் போல் நடிக்கும்போது, உண்மையான மாண்புடையவர்கள் மனம் தளரக்கூடாது எனும் உயரிய நோக்கில் எழுதப்பட்ட புகழ்பெற்ற கவிதை வரிகள் இவை.

- நூஹ் மஹ்ழரி.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset