செய்திகள் சிந்தனைகள்
தகராறு ஏற்பட்டால், அதைத் தீர்க்க முயலுங்கள். அல்லது ஒதுங்கி நில்லுங்கள்: ஒதுங்கி நிற்பதும் சிறந்த செயலே - வெள்ளிச் சிந்தனை
நபி (ஸல்) கூறினார்கள்:
"மக்களுக்கு தீங்கு செய்வதிலிருந்து விலகி இருங்கள். அதுவும் வணக்கமே!". (தபரானி)
அடுத்தவருக்கு நல்லது செய்ய முடியாவிட்டால், அவருக்கு தீங்கு செய்யாமல் இருப்பதன் மூலமும் நன்மையை சம்பாதிக்கலாம்.
மருத்துவ உதவி கேட்கும் ஓர் ஏழைக்கு நீங்கள் உதவ மறுத்தால்.. அது உங்கள் விருப்பம்.
ஆனால், 'அவர் வசதியானவர், பொய் சொல்கிறார்’ என்று கூறாதீர்கள்.
மருத்துவமனையின் கேஷியராக செயல்படாதீர்கள்.
திருமண நிச்சயம் முறிந்த பெண்ணை, அவள் போக்கில் விட்டுவிடுங்கள். நின்றுபோன காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் உளவாளியாக மாறாதீர்கள்.
அதைக் கிளறி, வதந்திகளை பரப்பாதீர்கள்!
தர்மம் செய்யும் செல்வந்தரை, 'பகட்டுக்காக கொடுக்கிறார்’ என்று சொல்லாதீர்கள். அவரை விட்டுவிடுங்கள். அவருடைய இறைவன் அவரை நன்கு அறிவான்.
உங்கள் முன்னிலையில் ஒருவர் மற்றவரைப் பற்றித் தவறாகப் பேசினால், அதை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். ஷைத்தானின் தூதனாக ஆகாதீர்கள்!
இரண்டு சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டால், அதைத் தீர்க்க முயலுங்கள். அல்லது ஒதுங்கி நில்லுங்கள். ஒதுங்கி நிற்பதும் சிறந்த செயலே. ஆனால் தயவுசெய்து நெருப்பில் எண்ணெயை ஊற்றாதீர்கள்.
வணக்கம் இரண்டு வகைப்படும்: நன்மை செய்தல் மற்றும் தீமையிலிருந்து விலகி இருத்தல்.
மக்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டால், பாதி வணக்கத்தை நிறைவேற்றிவிட்டீர்கள்.
உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு, மறுமைக்காகவும் பாடுபட்டால், மற்ற பாதியை நிறைவேற்றிவிட்டீர்கள்.
வாய்ப்புக்கேடு என்னவென்றால்.. எத்தனையோ பேர் பாதி வணக்கத்தையும் புறக்கணித்து, பாதி தீமையிலும் ஈடுபடுகிறார்கள்!
- நூஹ் மஹ்ழரி.
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 11:48 pm
சியோனிஸ்ட்டுகளின் தேர்தல் சதி நாடகம்தாம் விமானக் கத்திக் குத்து
September 25, 2026, 7:34 am
சிங்கத்தின் அருகில் நாய்கள் கூத்தாடுவதால்... வெள்ளிச் சிந்தனை
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
