செய்திகள் உலகம்
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக முகநூலில் பதிவுசெய்த இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவுதி உச்ச நீதிமன்றம்
ஜித்தா:
சவுதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறத்துறை துணை அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 27-ஆம் தேதி, முகநூலில் அனோஜன் நபிகள் நாயகம் குறித்து தவறாகப் பதிவிட்டதாக குற்றம்சாட்டி இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் அல்-அஹ்சா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனோஜனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 30 லட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
27 வயதான அனோஜனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நபி நாயகம் குறித்து தான் வெளியிட்ட அவதூறு பதிவுக்கு உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு அனோஜன் காணொலி ஒன்றையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், இலங்கை சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் கடந்த வாரம் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சட்ட வல்லுநர்களுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், நேற்று அனோஜனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை இலங்கையின் வெளியுறத்துறை துணை அமைச்சர் அருண் ஹேமசந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 7:39 pm
விமானக் கடத்தல் அச்சம்: மூடப்பட்ட ஜெர்மனி விமான நிலையம்
October 14, 2026, 11:23 am
சவூதி அராம்கோ கட்டிடத்தில் தீ விபத்து: ஹௌதி போராளிகளின் தாக்குதல் என சவூதி அரேபியா குற்றச்சாட்டு
October 13, 2026, 9:23 pm
Qantas விமானத்தில் மூட்டைப்பூச்சி: பயணம் ரத்து
October 13, 2026, 12:51 pm
இறுதி சடங்கின் போது கண் விழித்த 15 வயது சிறுமி: உறவினர்கள் பகீர்
October 13, 2026, 12:32 pm
பிரான்ஸ் நாட்டு பள்ளியில் இளைஞர் நடத்திய துப்பாக்கி சூடு: பள்ளி முதல்வர், ஆசிரியர் காயம்
October 11, 2026, 6:55 am
சவுதியின் ரியாத் விமான நிலையத் தாக்குதல்: விமானி உட்பட மூவா் உயிரிழப்பு
October 9, 2026, 6:13 pm
அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சார்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
October 7, 2026, 10:48 am
