நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு 

பாரிஸ்: 

பிரான்ஸ் நாட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என சுமார் 250,000க்கும் மேற்பட்டோர் பாரிஸில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

பாரிஸ், ஸ்ட்ராஸ்போர்க், ரென்னெஸ் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த வேளையில் மற்ற நகரங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. 

இந்த போராட்டத்தில் வெறும் 250,000 பேர் கலந்து கொண்டதாக பிரான்ஸ் நாட்டு உள்நாட்டு அமைச்சகம் தெரிவித்த நிலையில் சுமார் 450,000 பேர் வரை இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். 

மாணவர்களின் இந்த போராட்டம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான போராட்டமாக இது பார்க்கப்படுவதாக பிரான்ஸ் நாட்டின் பிரதமர் செபஸ்தியன் லெகொர்னு வர்ணித்தார். 

பிரான்ஸ் நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக இந்த போராட்டம் வெடித்துள்ளது. நடப்பு அரசாங்கத்திற்கு மக்கள் கடும் கோபம் கொண்டுள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டில் இந்த போராட்டம் தீவிரமடைந்தது 

போராட்டத்தை அடுத்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரோன், பிரதமர் செபஸ்தியன், அமைச்சர்களுடன் அவசர கூட்டத்தை நடத்தியுள்ளார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset