செய்திகள் உலகம்
சவூதி அராம்கோ கட்டிடத்தில் தீ விபத்து: ஹௌதி போராளிகளின் தாக்குதல் என சவூதி அரேபியா குற்றச்சாட்டு
ரியாத்:
சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சவூதி அராம்கோ நிறுவனத்தின் கட்டிடம் ஒன்றின் மீது ஹௌதி போராளிகள் தாக்குதல் நடத்தியதாக சவூதி குற்றம் சாட்டியுள்ளது.
அதேவேளையில், தலைநகர் ரியாதில் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் நால்வர் காயமடைந்தனர்.
யேமனில் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிடும் சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டமைப்பு, செவ்வாய்க்கிழமை மாலை பல ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக அறிவித்தது.
இந்த நடவடிக்கை ரியாத் வான்வெளிப் பகுதி உட்பட பல்வேறு இடங்களில் வெற்றிகரமாகச் செய்யப்படதாகத் தெரிவிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை மாலை தஹ்ரானில் உள்ள எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் நிர்வாகக் கட்டிடம் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலால் சிறிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது, ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
தலைநகர் ரியாதில் ஹௌதிகளின் இரண்டு குரூஸ் ஏவுகணைகள் சவூதி பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டன.
அந்த ஏவுகணைகளின் உடைந்த பாகங்கள் விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்ததாக சவூதி சிவில் பாதுகாப்பு முகமை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை அடங்குவர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகள் உடனடியாக அளிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சவூதி நாட்டின் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2026, 9:23 pm
Qantas விமானத்தில் மூட்டைப்பூச்சி: பயணம் ரத்து
October 13, 2026, 12:51 pm
இறுதி சடங்கின் போது கண் விழித்த 15 வயது சிறுமி: உறவினர்கள் பகீர்
October 13, 2026, 12:32 pm
பிரான்ஸ் நாட்டு பள்ளியில் இளைஞர் நடத்திய துப்பாக்கி சூடு: பள்ளி முதல்வர், ஆசிரியர் காயம்
October 11, 2026, 6:55 am
சவுதியின் ரியாத் விமான நிலையத் தாக்குதல்: விமானி உட்பட மூவா் உயிரிழப்பு
October 9, 2026, 6:13 pm
அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சார்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
