செய்திகள் உலகம்
அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சார்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
டர்பன்:
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழ் வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த நவீ பிள்ளை என்கிற நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி, சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முன்னெடுப்புகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.
யார் இந்த நவநீதம் பிள்ளை?
85 வயதாகும் நவநீதம் பிள்ளை, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர் ஆவார். இவர் தமிழ்வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்.
1973ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தபோது அவருக்கு சட்ட உதவி செய்தவர். தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தில் முதல் வெள்ளையினத்தவர் அல்லாத பெண் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
இவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராகப் பணியாற்றியுள்ளார்.
2021 முதல் 2025 வரை ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்கான ஐ.நா.வின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இலங்கை தமிழர்கள் பிரச்னைகளுக்காகவும் இவர் குரல் கொடுத்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
