செய்திகள் உலகம்
துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்ற தயாராகிறது அமெரிக்கா: பொதுமக்களுக்கு நேரலையில் காட்ட முடிவு
கலிஃபோர்னியா:
அமெரிக்கா அரசாங்கம் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை நேரலையில் காட்டவிருக்கிறது.
நீடல் எனும் அந்தக் குற்றவாளி டிசம்பர் 3ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மரண தண்டனை துப்பாக்கிச் சூடு மூலம் நிறைவேற்றப்படுவது 1945ஆம் ஆண்டுக்கு பிறகு இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் இராணுவ மனநல மருத்துவரான நீடல் 2009இல் டெக்சஸ் ராணுவத் தளத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
அதில் 13 பேர் மாண்டனர்.
நீடலைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
அவரின் உடலின் ஒரு பகுதி செயலிழந்த நிலையில் இப்போது உள்ளது.
நீடல் துப்பாக்கிச் சூடு நடத்திய அதே இடத்தில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) கூறியுள்ளார்.
அமெரிக்காவில் மரண தண்டனை மின்சார அதிர்வு, நச்சு வாயு, ராணுவத் துப்பாக்கிச் சூடு ஆகியவை வழி நிறைவேற்றப்பட அனுமதி உண்டு.
நச்சு ஊசி செலுத்தப்படுவதற்குத் தேவையான ரசாயனத்தைப் பெறுவதில் சிரமம் இருப்பதால் மற்ற தெரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவெளியில் குற்றவாளிகளுக்கு தண்டனை தரும் ஈரானையும் இதர முஸ்லிம் நாடுகளையும் கண்டிக்கும் அமெரிக்கா, அவை மனித உரிமை மீறல் என்று கூறும் நிலையில் தற்போது இந்த கொலை தண்டனையை நேரலையில் காட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:13 pm
அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சார்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
