நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இறுதி சடங்கின் போது கண் விழித்த 15 வயது சிறுமி: உறவினர்கள் பகீர் 

சகாபுலாஸ்: 

உயிரிழந்துவிட்டதாகக் கருதி இறுதிச் சடங்குகளுக்குத் தயாராக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர், சவப்பெட்டிக்குள் திடீரென கண் விழித்து எழுந்து உட்கார்ந்த சம்பவம் உலக நாடுகளை மிரள வைத்துள்ளது.

குவாத்தமலா நாட்டின் சகாபுலாஸ் நகரில் உள்ள எல் ஜோகோட் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி யூலெய்சி இக்சோடோயாக் , திடீரென ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலியால் அவதிப்பட்டுள்ளார்.

உடனடியாக அவரது தந்தை ஆபிரகாம் இக்சோடோயாக் மகளை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, வழியிலேயே அந்தச் சிறுமி மயக்கமடைந்துள்ளார்

சிறுமி மூச்சுவிடவில்லை என்றும் நாடித்துடிப்பு இல்லை என்றும் நினைத்த தந்தை, அவர் இறந்துவிட்டதாகத் தவறாக முடிவு செய்து மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிற்கே திரும்பி வந்துள்ளார்.

இதனையடுத்து குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் சோகத்துடன் சிறுமிக்கு இறுதிச் சடங்கு செய்ய சவப்பெட்டி வாங்கி உடலைப் பெட்டியில் வைத்துள்ளனர். ஊரே கூடி அழுதுகொண்டிருந்த அந்தத் துயரமான சூழலில், திடீரென சவப்பெட்டிக்குள் அசைவு இருப்பதைச் சிறுமியின் தாயார் லெஸ்வியா ரிோஸ் கவனித்துள்ளார்.

உடனே பதறியடித்துக்கொண்டு பெட்டியின் கண்ணாடிக் கதவு வழியாகப் பார்த்தபோது, உள்ளே சிறுமி அசைவதைக் கண்டு உறவினர்களை உடனடியாக அழைத்துச் சவப்பெட்டியைத் திறந்தனர்.

சவப்பெட்டி திறக்கப்பட்டதும் கண் விழித்து எழுந்து உட்கார்ந்த சிறுமி, சுற்றியிருந்தவர்களைப் பார்த்துத் தண்ணீர் கேட்டுள்ளார். இறந்ததாக நம்பி சுமார் 8 மணி நேரம் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த சிறுமி திடீரென உயிரோடு எழுந்து பேசியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக வெளியில் மீட்டுப் பரிசோதித்தனர்.

இந்த விநோத சம்பவம் தொடர்பான மொபைல் போன் வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset