செய்திகள் உலகம்
Qantas விமானத்தில் மூட்டைப்பூச்சி: பயணம் ரத்து
சிட்னி:
இத்தாலியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படவிருந்த குவாண்டாஸ் (Qantas) விமானத்தில் மூட்டைப்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணம் ரத்துச்செய்யப்பட்டது.
முன்னதாக விமானம் பெர்த்திலிருந்து ரோமுக்குச் சென்றது. அது சுமார் 17 மணி நேரப் பயணம் ஆகும்.
பயணிகள் பலரும் மூட்டைப்பூச்சிக் கடியால் அவதிப்பட்டனர் என்று BBC தெரிவித்துள்ளது.
அரிப்பைக் குறைக்க சிலருக்கு ஒவ்வாமைக்கான மருந்து வழங்கப்பட்டது. பிறகு அந்த மருந்தும் தீர்ந்துபோனதாகத் தெரிகிறது.
Boeing 787 Dreamliner விமானத்தின் சாதாரண வகுப்பு இருக்கைகள் சிலவற்றில் மூட்டைப்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
முழுமையான சுத்திகரிப்புப் பணிகளுக்காக Qantas அந்த விமானத்தை சேவையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தியது.
பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட குவாண்டாஸ் அவர்களுக்குத் தங்குமிடம் கொடுத்து 2 நாளுக்குள் மாற்றுப் பயணத்துக்கும் ஏற்பாடு செய்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2026, 12:51 pm
இறுதி சடங்கின் போது கண் விழித்த 15 வயது சிறுமி: உறவினர்கள் பகீர்
October 13, 2026, 12:32 pm
பிரான்ஸ் நாட்டு பள்ளியில் இளைஞர் நடத்திய துப்பாக்கி சூடு: பள்ளி முதல்வர், ஆசிரியர் காயம்
October 11, 2026, 6:55 am
சவுதியின் ரியாத் விமான நிலையத் தாக்குதல்: விமானி உட்பட மூவா் உயிரிழப்பு
October 9, 2026, 6:13 pm
அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சார்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
