செய்திகள் உலகம்
விமானக் கடத்தல் அச்சம்: மூடப்பட்ட ஜெர்மனி விமான நிலையம்
நியூரம்பெர்க்:
விமானம் கடத்தப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்திய எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஜெர்மனியின் நியூரம்பெர்க் (Nuremberg) விமான நிலையம் தற்காலிகமாய் மூடப்பட்டது.
கோரெண்டன் ஏர்லைன்ஸ் (Corendon Airlines) விமானம் கிரீஸிலிருந்து நியூரம்பெர்க் நகருக்குச் சென்றுகொண்டிருந்தபோது அந்த சம்பவம் நடந்தது.
ஒலியலைத் தகவல் தொடர்பில் ஏற்பட்ட கோளாற்றால் அவசர எச்சரிக்கைத் தகவல் தவறுதலாய் அனுப்பட்டதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்தது.
முன்னெச்சரிக்கையாகக் காவல்துறையினர் நியூரம்பெர்க் விமான நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்புத் தடுப்புகளை அமைத்தனர்.
பயணிகளைப் பாதுகாக்கப் போர் விமானங்களும் அனுப்பப்பட்டன.
ஆறு விமானங்கள் தாமதமாய்ப் புறப்பட நேர்ந்தது. நியூரம்பெர்க்கில் தரையிறங்க வேண்டிய இரண்டு விமானங்கள் வேறு நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 11:23 am
சவூதி அராம்கோ கட்டிடத்தில் தீ விபத்து: ஹௌதி போராளிகளின் தாக்குதல் என சவூதி அரேபியா குற்றச்சாட்டு
October 13, 2026, 9:23 pm
Qantas விமானத்தில் மூட்டைப்பூச்சி: பயணம் ரத்து
October 13, 2026, 12:51 pm
இறுதி சடங்கின் போது கண் விழித்த 15 வயது சிறுமி: உறவினர்கள் பகீர்
October 13, 2026, 12:32 pm
பிரான்ஸ் நாட்டு பள்ளியில் இளைஞர் நடத்திய துப்பாக்கி சூடு: பள்ளி முதல்வர், ஆசிரியர் காயம்
October 11, 2026, 6:55 am
சவுதியின் ரியாத் விமான நிலையத் தாக்குதல்: விமானி உட்பட மூவா் உயிரிழப்பு
October 9, 2026, 6:13 pm
அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சார்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
October 7, 2026, 10:48 am
