செய்திகள் மலேசியா
மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டுக் கூட்டத்திற்கு துவாங்கு முஹ்ரிஸ் அழைப்பு
சிரம்பான்:
வரும் அக்டோபர் 13 முதல் 15 வரை நடைபெறவுள்ள ஆட்சியாளர்கள் மாநாட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ள துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் அழைக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், மாட்சிமை பொருந்திய மன்னர் நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசார் அரியணையில் தொடர்ந்து நீடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெறும் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கவிருக்கும் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
நெகிரி செம்பிலான் அரச அரியணைக்கான வாரிசுரிமை நெருக்கடி இன்னும் தீர்க்கப்படாத ஒரு நேரத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
துவாங்கு முஹ்ரிஸுக்குப் பதிலாக துங்கு நட்ஸருதீன் துவாங்கு ஜாஃபருக்கு அழைப்பு விடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2026, 5:14 pm
ஜெட்டாவிற்கான விமான சேவைகளை பாத்தேக் ஏர் ரத்து செய்தது
October 12, 2026, 3:56 pm
உம்ரா யாத்திரையை மலேசியர்கள் ஒத்திவைக்க வேண்டும்: முஹம்மத் ஹசான்
October 12, 2026, 3:46 pm
கோல லிப்பிஸில் நடந்த விபத்தில் ரந்தாவ் பஞ்ஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் காயம்
October 12, 2026, 3:45 pm
