செய்திகள் மலேசியா
ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், புத்ராஜெயாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை மூடப்படும்: ஃபட்லினா சிடேக்
புத்ராஜெயா:
தற்போதைய புகைமூட்டச் சூழலைத் தொடர்ந்து ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், புத்ராஜெயாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை செவ்வாய்க்கிழமை மூடப்படும்.
கல்வியமைச்சர் டத்தோஶ்ரீ ஃபட்லினா சிடேக் முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்தார்.
இந்த மூடல், சிலாங்கூரில் உள்ள உலு லங்காட், பெட்டாலிங் பெர்டானா, கோல லங்காட், சிப்பாங் ஆகியவற்றின் கல்வி இலாகாவின் கீழ் உள்ள பள்ளிகளையும், அத்துடன் பகாங்கில் உள்ள குவாந்தான், ரொம்பின் ஆகியவற்றின் கல்வி இலாகாவின் கீழ் உள்ள பள்ளிகளையும் உள்ளடக்கியது.
கோலாலம்பூர், லபுவான், கெடா, கிளந்தான், பெர்லிஸ், பினாங்கு, பேரா, திரெங்கானு, சபா, சரவா ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகின்றன.
இதேபோல், இந்த மூடலால் பாதிக்கப்படாத சிலாங்கூர், பகாங்கின் பிற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படுகின்றன.
வழக்கம் போல் செயல்படும் பள்ளிகள், தற்போதைய காற்றின் தர நிலைகளுக்கு ஏற்ப வெளிப்புறச் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் வெளியே செல்லும்போது, குறிப்பாகப் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பொருத்தமான முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2026, 5:16 pm
மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டுக் கூட்டத்திற்கு துவாங்கு முஹ்ரிஸ் அழைப்பு
October 12, 2026, 5:14 pm
ஜெட்டாவிற்கான விமான சேவைகளை பாத்தேக் ஏர் ரத்து செய்தது
October 12, 2026, 3:56 pm
உம்ரா யாத்திரையை மலேசியர்கள் ஒத்திவைக்க வேண்டும்: முஹம்மத் ஹசான்
October 12, 2026, 3:46 pm
கோல லிப்பிஸில் நடந்த விபத்தில் ரந்தாவ் பஞ்ஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் காயம்
October 12, 2026, 3:45 pm
