செய்திகள் மலேசியா
உம்ரா யாத்திரையை மலேசியர்கள் ஒத்திவைக்க வேண்டும்: முஹம்மத் ஹசான்
சிப்பாங்:
உம்ரா யாத்திரை மேற்கொள்வதற்காக சவூதி அரேபியாவுக்குச் செல்லும் மலேசியர்கள், தற்போதைக்குத் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.
கடந்த சனிக்கிழமை ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த அறிவுரை வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர்.
மெக்காவில் இன்னும் எந்த சம்பவமும் நடக்கவில்லை. ரியாத்தில் ஏவுகணைகள் வெடித்தன. அவ்வளவுதான்...
எனவே மலேசியர்கள் தங்கள் பயணங்களை மெக்கா, மதீனா ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், என்று அவர் கூறினார்.
சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா ராயா வளாகத்தில், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் நாடு திரும்பும் நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2026, 5:16 pm
மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டுக் கூட்டத்திற்கு துவாங்கு முஹ்ரிஸ் அழைப்பு
October 12, 2026, 5:14 pm
ஜெட்டாவிற்கான விமான சேவைகளை பாத்தேக் ஏர் ரத்து செய்தது
October 12, 2026, 3:46 pm
கோல லிப்பிஸில் நடந்த விபத்தில் ரந்தாவ் பஞ்ஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் காயம்
October 12, 2026, 3:45 pm
