நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேப்பாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் குடும்பங்களை  பணம் கேட்டு வங்கிகள் துரத்தாமல் இருக்க சிறப்பு நிதித் திட்டம் தேவை: மணிவண்ணன்

கோலாலம்பூர்:

நேப்பாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் குடும்பங்களை பணம் கேட்டு வங்கிகள் துரத்தாமல் இருக்க சிறப்பு நிதித் திட்டம் தேவை.

நேப்பாளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்பங்களின் பிரதிநிதி ஆர். மணிவண்ணன் இதனை கூறினார்.

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களின் உறவினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர், அக்குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக ஒரு கட்டமைக்கப்பட்ட நிதிப் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்த முன்மொழிவை பேங்க் நெகாரா மலேசியாவிடம் சமர்ப்பித்துள்ளார்.

இந்த முன்மொழிவில் பொறுப்புப் பாதுகாப்பு, சொத்துப் பாதுகாப்பு, வணிகத் தொடர்ச்சி ஆகியவற்றுக்கான தீர்வுகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன என்று அக்குழுவின் செய்தித் தொடர்பாளர் ஆர். மணிவண்ணன் கூறினார்.

வங்கி, நிதி,  தக்காபுல் சங்கப் பிரதிநிதிகளுக்கு 20 பக்கங்கள் கொண்ட ஒரு தனி ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது.

பேங்க் நெகாரா மலேசியா அதிகாரிகளுடனான சந்திப்பைத் தொடர்ந்து, முறையான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்படும் வரை கடன் வசூல் முயற்சிகளை நிறுத்தி வைக்க நிதி நிறுவனங்கள் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக மணிவண்ணன் கூறினார்.

ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை, தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கொள்கையளவில் அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பணம் கேட்டு அவர்கள் குடும்பங்களைத் துரத்த மாட்டார்கள் என்று அவர் இன்று இங்குள்ள ஆசிய  வங்கியாளர்கள் நிறுவனக் கட்டிடத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

முன்மொழியப்பட்ட கட்டமைப்பின் கீழ், திரட்டப்பட்ட வட்டி, தாமதக் கட்டண அபராதங்கள்,  தன்னிச்சையான கடன் கால நீட்டிப்புகளை வெளிப்படையாகத் தள்ளுபடி செய்து, வங்கிகள் முழுமையான கடன் தற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என அந்தக் குழு விரும்புகிறது.

அந்த முன்மொழிவின் மற்ற உள்ளடக்கங்களை மணிவண்ணன் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset