செய்திகள் மலேசியா
கோல லிப்பிஸில் நடந்த விபத்தில் ரந்தாவ் பஞ்ஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் காயம்
கோல லிப்பிஸ்:
கோல லிப்பிஸ் பகுதியில் நடந்த விபத்தில் சிக்கிய ரந்தாவ் பஞ்ஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி ஜைலா யூசோப், மார்பு, வயிற்றில் காயம் ஏற்பட்டது.
மாலை சுமார் 6 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், அவரும் அவரது 26 வயது மகளும் கெலந்தானின் குவா முசாங்கிலிருந்து கோலாலம்பூருக்குப் பணி விஷயமாக ஒரு ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக லிப்பிஸ் போலிஸ் தலைவர் இஸ்மாயில் மான் கூறினார்.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் இருந்த சாலைத் தடுப்பில் மோதுவதற்கு முன்பு நிலைதடுமாறிச் சென்றதாக நம்பப்படுகிறது.
மேல் சிகிச்சைக்காக சித்தி ஜைலா கோலா லிப்பிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அவரது மகளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2026, 5:16 pm
மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டுக் கூட்டத்திற்கு துவாங்கு முஹ்ரிஸ் அழைப்பு
October 12, 2026, 5:14 pm
ஜெட்டாவிற்கான விமான சேவைகளை பாத்தேக் ஏர் ரத்து செய்தது
October 12, 2026, 3:56 pm
உம்ரா யாத்திரையை மலேசியர்கள் ஒத்திவைக்க வேண்டும்: முஹம்மத் ஹசான்
October 12, 2026, 3:45 pm
