நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் புதன்கிழமை முதல் 1,000 ரிங்கிட்டை பெறுவார்கள்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் புதன்கிழமை முதல் ஒரு முறை வழங்கப்படும் சிறப்பு 1,000 ரிங்கிட் தொகையைப் பெறுவார்கள்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை தெரிவித்தார்.

புதன்கிழமை அன்று போக்குவரத்து அமைச்சிற்கு அழைக்கப்பட்ட முதல் குழுவினருக்கு இந்த உதவித்தொகை படிப்படியாக வழங்கப்படும். அதற்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

தீபாவளி கொண்டாட்டத்திற்கு முன்பாக இந்து ஓட்டுநர்கள் இந்த உதவியைப் பெறுவதை அரசாங்கம் உறுதி செய்ய விரும்புவதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கைகள் ஏற்கனவே பெறப்பட்டுவிட்டதால், 2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே இந்த உதவியை வழங்க முடியும் என்று அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

சிறப்பு 'எச்' வாகனப் பதிவு எண் தொடர்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 91 மில்லியன் ரிங்கிட்டில் இந்த நிதி பெறப்பட்டதாக அந்தோனி லோக் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் 2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, ​​பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடு முழுவதும் உள்ள 38,000 டாக்சி,  வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கும், 15,000 பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset