செய்திகள் மலேசியா
நாட்டின் பொன் வாத்துகளுக்கு அரசியல் முடிவுகளைச் சுமத்த வேண்டாம்: டத்தோஶ்ரீ ஹம்ஸா
கோலாலம்பூர்:
பெட்ரோனாஸ், தெனாகா நேஷனல் பெர்ஹாட், ஓய்வூதிய போன்ற நாட்டின் 'பொன் வாத்துகளுக்கு' அரசியல் முடிவுகளைச் சுமத்த வேண்டாம்.
எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்ஸா ஜைனுடின் அரசாங்கத்திற்கு இதனை நினைவூட்டினார்.
இந்த முக்கிய நிறுவனங்கள், அவற்றின் நிதி நிலையைப் பாதிக்கக்கூடிய செலவுகளை ஏற்கவோ அல்லது அரசாங்க முடிவுகளைச் செயல்படுத்தவோ கட்டாயப்படுத்தப்படாமல், தத்தமது பணிகளைச் செய்வதற்கு அவற்றுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
மக்களவையில் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் குறித்த விவாதத்தின்போது, அரசாங்கம் அரசியல் முடிவுகளை எடுக்கிறது, ஆனால் அதன் விளைவுகளை அந்த நிறுவனங்களே ஏற்கும்படி விட்டுவிடுகிறது என்று ஹம்ஸா குற்றம் சாட்டினார்.
நாட்டின் 'பொன் வாத்துகள்' தங்களின் முக்கியப் பணிகளைத் தாங்களே செய்யட்டும் என்று லாரூட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2026, 5:16 pm
மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டுக் கூட்டத்திற்கு துவாங்கு முஹ்ரிஸ் அழைப்பு
October 12, 2026, 5:14 pm
ஜெட்டாவிற்கான விமான சேவைகளை பாத்தேக் ஏர் ரத்து செய்தது
October 12, 2026, 3:56 pm
உம்ரா யாத்திரையை மலேசியர்கள் ஒத்திவைக்க வேண்டும்: முஹம்மத் ஹசான்
October 12, 2026, 3:46 pm
