நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜெட்டாவிற்கான விமான சேவைகளை பாத்தேக் ஏர் ரத்து செய்தது

சிப்பாங்:

ரியாத் அனைத்துலக விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாத்தேக் ஏர் நிறுவனம் இன்று இரவு சவூதி அரேபியாவிற்கான தனது திட்டமிடப்பட்ட விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு இரவு 7.25 மணிக்குச் செல்லவிருந்த ஓடி701 விமானம் 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக' ரத்து செய்யப்பட்டதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகள், விமானப் பணியாளர்களின் பாதுகாப்பும் நலனுமே தங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும் அது கூறியுள்ளது.

விமானச் செயல்பாடுகளில் ஏற்படக்கூடிய பாதிப்பை மதிப்பிடுவதற்காக, பதிக் ஏர் நிறுவனம் நிலவரங்களைக் கண்காணித்து வருவதுடன், சம்பந்தப்பட்ட விமானப் போக்குவரத்து அதிகாரிகள், விமான நிலைய இயக்குநர்கள் மற்றும் பிற தரப்பினருடன் ஒருங்கிணைப்பைப் பேணி வருகிறது.

விமான நிறுவனம் நிலைமையைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து, பெறப்பட்ட சமீபத்திய தகவல்கள் மற்றும் பொருந்தக்கூடிய பாதுகாப்புத் தேவைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் என்று அது ஒரு அறிக்கையில் கூறியது.

பாதிக்கப்பட்ட பயணிகள் அடுத்த கிடைக்கக்கூடிய விமானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றம் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் பாத்தேக் ஏர் கூறியது.

விமானச் செயல்பாடுகள் குறித்த சமீபத்திய தகவல்களுக்கு, பயணிகள் பதிக் ஏர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக ஊடக சேனல்களைக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset