நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சின் அதிகாரிகளை சந்தித்ததை ஒப்புக் கொண்ட டோனி பெர்னாண்டஸ், ஏர் ஆசியாவுக்கு புத்ராஜயாவின் உதவி தேவையில்லை என்றார்

சிப்பாங்:

சிக்கலில் உள்ள விமான நிறுவனம் அரசாங்க உதவியின்றி தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்று ஏர் ஆசியாவின் இணை நிறுவனரும் ஆலோசகருமான டோனி பெர்னாண்டஸ் கூறினார்.

புத்ராஜயாவிடமிருந்து சாத்தியமான ஆதரவைப் பற்றி விவாதிக்க, அவர் சமீபத்தில் நிதி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்ததாக வரும் செய்திகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஜெட் எரிபொருள் விலையில் ஏற்பட்ட கடுமையான உயர்வு காரணமாக இந்த மலிவு விலை விமான நிறுவனம் நிதி ரீதியாகப் போராடி வருகிறது.

மேலும் சர்வதேச கடன் சந்தைகள் மூலம் 1 பில்லியன் ரிங்கிட்டையும் உள்ளூர் கடன் வசதிகள் மூலம் 700 மில்லியன் ரிங்கிட்டையும் திரட்ட முயன்று வருகிறது.

ஏர் ஆசியாவின் உள்நாட்டு சந்தைப் பங்கைக் கையகப்படுத்துவது தொடர்பாக மலேசியா ஏர்லைன்ஸ்,  பாத்தேக் ஏர் நிறுவனங்களுடன் புத்ராஜயா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

பெர்னாண்டஸ் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது சொந்த வேண்டுகோளின் பேரில் நிதி அமைச்சு, போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளை  சந்தித்ததை உறுதிப்படுத்தினார்.

ஆனால் விமான நிலையக் கட்டணங்கள்,  எரிபொருள் போன்ற விமானப் பயணம் தொடர்பான செலவுகள் குறித்து மட்டுமே விவாதித்ததாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset