நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை வத்சலா இராஜகோபால் காலமானார்

சென்னை: 

தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை வத்சலா இராஜகோபால் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார் அவருக்கு வயது 93ஆகும்.

தமிழ்த்திரைப்படங்களிலும் தமிழ்த் தொடர் நாடகங்களிலும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை வத்சலா இராஜகோபால் 

1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் தமிழில் நடிக்க ஆரம்பித்த அவர் சதிலீலாவதி, காலமெல்லாம் காதல் வாழ்க, ரிதம் ஆகிய படங்களிலும் துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார் 

2000ஆம் ஆண்டு வெளிவந்த ரிதம் படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு அம்மாவாகவும் 2005ஆம் ஆண்டு வெளிவந்த அந்நியன் திரைப்படத்தின் விக்ரமிற்கு பாட்டியாகவும் நடித்திருப்பார் 

நடிகை வத்சலா இராஜகோபால் மறைவிற்குத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset