நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

"எனக்கே நம்பிக்கை இல்லாத சூழலில், அவர் என் மீது வைத்த நம்பிக்கை!": மமிதா பைஜூ

திருவனந்தபுரம்:

திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' மல்லுவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியிருக்கிறது.

நிவின் பாலி, மமிதா பைஜு இணைந்து நடித்த 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சக்சஸ் மீட்டில் மமிதா பைஜூ பேசுகையில், "'சூப்பர் சரண்யா' படம் ரிலீஸாகாத சமயத்திலேயே இயக்குநர் கிரிஷ் என்னிடம் இந்த 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' படத்தின் கதையைக் கூறினார்.

அப்போதே இந்தப் பாத்திரத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் சொன்னார். எந்த நம்பிக்கையில் அன்று இதனை சொன்னார் என்று எனக்கு இன்றும் தெரியவில்லை.

'பிரேமலு', 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' என என்னால் ஒரு முதன்மை கதாநாயகியாக நடித்துப் படத்தைத் தாங்கிப் பிடிக்க முடியும் என்று எனக்கே நம்பிக்கை இல்லாத ஒரு சூழலில், அவர் என் மீது தீவிர நம்பிக்கை வைத்தார். அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்!" எனப் பேசியிருக்கிறார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset