செய்திகள் கலைகள்
சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 2026 போட்டி: இளம் பாடகர்களை அடையாளப்படும் தளம்: குணராஜ் பெருமிதம்
கோலாலம்பூர்:
செந்தோசா சட்டமன்றத்தின் மகத்தான ஆதரவில் SELANGOR JUNIOR SUPERSTARS 2026 இறுதிச்சுற்று இங்குள்ள கோலாலம்பூர் AGENDA SURIA CONVENTION HALLஇல் சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாடல் திறன் போட்டி தற்போது 5ஆவது ஆண்டை எட்டியுள்ளது.
இவ்வேளையில் நேற்றிரவு நடைபெற்ற இறுதி போட்டியில் 11 போட்டியாளர்கள் பங்கெடுத்தனர். அதில் பாடகர் நீரோஷன் அவர்கள் வெற்றியாளராக வாகை சூடினார். சங்கீத ஜாதி முல்லை என்ற பாடலைப் பாடி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார்
5 வருடமாக நடத்தி வரும் இந்த பாடல் திறன் போட்டிக்கு மகத்தான ஆதரவு கிடைத்து வருகிறது என்றும் இந்திய சமூகத்தில் இளம் பாடகர்களை அடையாளம் காணும் தளமாக உள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் சொன்னார்.
மேலும், AGENDA SURIA COMMUNICATION நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்து SELANGOR JUNIORS SUPERSTARS போட்டி நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.
இந்த இறுதிபோட்டியில் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன், AGENDA SURIA COMMUNICATION நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஜகராவ், செந்சோசா பணிப்படை உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 3:26 pm
தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை வத்சலா இராஜகோபால் காலமானார்
October 27, 2026, 11:20 am
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஓம் திரைப்படத்தில் நித்யா ரெட்டியாக நடிகை சாய் பல்லவி
October 23, 2026, 3:30 pm
"என் உறவுகளை நான் இழந்துவிட்டேன்" - கண் கலங்கிய ஆமீர் கான்
October 21, 2026, 11:46 am
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் தொடர் வசூல் வேட்டை :6 நாட்களில் 541 கோடி வசூல்
October 20, 2026, 3:37 pm
'நீ நடந்தால் நடை அழகு...' வைரலாகும் தர்மன் ரஜினியின் ஸ்டைல்
October 19, 2026, 6:14 pm
"எனக்கே நம்பிக்கை இல்லாத சூழலில், அவர் என் மீது வைத்த நம்பிக்கை!": மமிதா பைஜூ
October 19, 2026, 6:09 pm
இந்திய இணையமைச்சர் எல்.முருகன் ராஜினாமா பின்னணியில் பாலிவுட் நடிகை
October 19, 2026, 10:26 am
மும்பையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் டைகர் ஷெராஃப் உயிர் தப்பினார்: இருவர் காயம்
October 18, 2026, 4:22 pm
