செய்திகள் கலைகள்
ராமாயணம் - Godzilla Minus Zero திரைப்படங்கள் அமெரிக்காவில் வசூல் வேட்டை
நியூயார்க்:
வட அமெரிக்காவில் Ramayana: Rise of a Legend திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெளியிடப்பட்ட முதல் வாரயிறுதியில் அது 8.7 மில்லியன் டாலர் வசூலைக் குவித்தது.
இந்தியாவில் அந்தப் படத்தின் வசூல் 32 மில்லியன் டாலர்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகச் செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் அது.
அதன் முதல் பாகம் 130 நாடுகளில், 10,000க்கும் அதிகமான திரையரங்குகளில் 17 மொழிகளில் வெளியிடப்பட்டது.
ஓர் இந்தியத் திரைப்படம் இவ்வளவு பெரிய அளவில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட பலர் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் 2028ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது.
இந்தப் போட்டியில் ஜப்பானிய திரைப்படம் ஒன்றும் அமெரிக்காவில் அமோக வரவேற்பைப் பெற்றது.
Godzilla Minus Zero திரைப்படம் வட அமெரிக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
முதல் வார இறுதியில் அது 31.6 மில்லியன் டாலர் ஈட்டியது.
வட அமெரிக்காவில் வெளிநாட்டு மொழித் திரைப்படம் வெளியான முதல் வார இறுதியில் இவ்வளவு அதிகம் வசூலைக் குவித்திருப்பது இதுவே முதல்முறை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2026, 3:28 pm
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம்: நவம்பர் 12ஆம் தேதி AMAZON PRIME ஒடிடி தளத்தில் வெளியாகிறது
November 1, 2026, 12:30 pm
சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 2026 போட்டி: இளம் பாடகர்களை அடையாளப்படும் தளம்: குணராஜ் பெருமிதம்
October 30, 2026, 3:26 pm
தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை வத்சலா இராஜகோபால் காலமானார்
October 27, 2026, 11:20 am
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஓம் திரைப்படத்தில் நித்யா ரெட்டியாக நடிகை சாய் பல்லவி
October 23, 2026, 3:30 pm
"என் உறவுகளை நான் இழந்துவிட்டேன்" - கண் கலங்கிய ஆமீர் கான்
October 21, 2026, 11:46 am
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் தொடர் வசூல் வேட்டை :6 நாட்களில் 541 கோடி வசூல்
October 20, 2026, 3:37 pm
'நீ நடந்தால் நடை அழகு...' வைரலாகும் தர்மன் ரஜினியின் ஸ்டைல்
October 19, 2026, 6:14 pm
"எனக்கே நம்பிக்கை இல்லாத சூழலில், அவர் என் மீது வைத்த நம்பிக்கை!": மமிதா பைஜூ
October 19, 2026, 6:09 pm
