நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

"என் உறவுகளை நான் இழந்துவிட்டேன்" - கண் கலங்கிய ஆமீர் கான்

சிங்கப்பூர்:

நடிகர் ஆமிர் கான், சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு 'ஸ்கிரீன் ஐகான்' விருதைப் பெற்றார்.

இந்த நிகழ்வில் மேடையில், தான் இழந்த உறவுகள் குறித்துப் பேசும்போது கண்கலங்கினார் ஆமிர் கான்.

அவர் பேசுகையில், "கொரோனா லாக்டவுன் காலத்தில் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருந்தபோதுதான் என் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். என் வாழ்க்கையின் 30 ஆண்டுகள் ஓடி மறைந்திருந்தன.

ஒரு வேலையின் மீது தீவிரமான ஈடுபாட்டோடு உழைப்பது தவறு கிடையாது. ஆனால், அதையே 30 வருடங்களாகத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால்? அந்த உழைப்பினால் என் உறவுகளை நான் இழந்துவிட்டேன்.

என் குழந்தைகளுடன் செலவிட வேண்டிய பொன்னான நேரத்தை நான் இழந்துவிட்டேன் என்ற ஏக்கம் என்னை உலுக்கியது.

நல்லவேளையாக இந்த எண்ணம் எனக்கு 86 வயதில் வராமல், 56 வயதிலேயே வந்தது சந்தோஷம். 86 வயதில் தோன்றியிருந்தால் எதையுமே மாற்றியிருக்க முடியாது. அதனால் கடந்த 4 ஆண்டுகளாகவே எனது குடும்பத்தினருடனும், நெருங்கிய நண்பர்களுடனும் அதிக நேரத்தைச் செலவழித்து வருகிறேன் என்று  பேசினார். 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset