நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழர்களின் அடையாளத்தைப் பிரதமர் அறிந்திருக்கிறார்; அமைச்சர்களுக்கும் அது தெரிந்திருந்தால் மகிழ்ச்சி: டத்தோஸ்ரீ சரவணன்

ஷாஆலம்:

தமிழர்களின் அடையாளத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மிகவும் தெளிவாக அறிந்திருக்கிறார்.

அமைச்சர்களுக்கும் அது தெரிந்திருந்தால் மகிழ்ச்சி என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போதும் பிரதமர் மக்களைவையில் திருக்குறளை பொருளுடன் சொல்கிறார்.

இந்நாட்டில் 85 சதவீதம் தமிழர்கள் தான் தமக்கு ஆதரவு தருகிறார்கள். என்ன சொன்னால் அவர்களை கவர முடியும் என்று அவருக்கு தெரிகிறது.

குறிப்பாக தமிழர்களின் அடையாளம் என்று பிரதமருக்கு தெளியாக தெரிகிறது.

அமைச்சர்களுக்கும் அது தெரிந்திருந்தால் சமுதாயத்தின் ஆதரவு கிடைக்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

முன்னதாக மலேசியத் தமிழர் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க இன அடையாள மாநாட்டைத் தலைமையுரையாற்றித் தொடக்கி வைத்ததில் பெருமிதம் கொள்கிறேன்.

தொல்காப்பியம் காட்டும் இலக்கணம், திருக்குறள் போதிக்கும் வாழ்வியல் நெறி, புறநானூறு பறைசாற்றும் வீரம் எனத் தமிழர்களின் இலக்கியக் கூறுகள் யாவும் 'தமிழர்' என்ற தனித்துவமான அடையாளத்தை மையமிட்டே சுழல்கின்றன.

“தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற முழக்கம், வெறும் உணர்ச்சிப் பெருக்கல்ல.

அது நம் மரபையும் தற்காலத் தேவையையும் உணர்த்தும் விழிப்புணர்வுக் குரல். சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்; தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்
தமிழையும், சமயத்தையும் பிரிக்க இயலாது.

இன்றைய சூழலில் மொழியையும், கலையையும் தூக்கிப் பிடிக்கும் அதே வேளையில், பொருளாதாரக் கொள்கையையும் நாம் முன்னிறுத்த வேண்டும். பொருளாதாரத்தில் நாம் சிறந்து விளங்கும் போதுதான் நமது குரல் ஓங்கி ஒலிக்கும் என்று  தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset