செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநில அரசு சார்பில் 576 இந்திய மாணவர்களுக்கு 1,546,515 ரிங்கிட் கல்வி நிதியுதவி
ஷாஆலம்:
சிலாங்கூர் மாநில அரசு சார்பில் இன்று 576 இந்திய மாணவர்களுக்கு 1,546,515 ரிங்கிட் கல்வி நிதியுதவியாக வழங்கப்பட்டது.
கடந்த 2013ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக கணபதி ராவ் இருந்தபோது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வசதி குறைந்த இந்தியர் உயர்கல்வி மாணவர்களுக்கு உதவ கல்வி நிதி திட்டத்தை உருவாக்கினார்.
2013 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை வசதி குறைந்த இந்தியர் மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு கல்வி நிதியை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இந்த உதவி நிதி வழங்கப்பட்டது.
டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு தலா 2,000 ரிங்கிட்டும் டிகிரி பயிலும் மாணவர்களுக்கு தலா 3,000 ரிங்கிட்டும் வழங்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
சிலாங்கூர் மாநில நம்பிக்கை கூட்டணி அரசு இந்திய சமுதாயத்திற்கு எப்போதும் அதிக உதவிகளையும் மானியமும் வழங்கி வருகிறது என்று பாப்பாராயுடு தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2026, 9:39 am
பிற மதங்களின் வழிபாட்டு சடங்குகளைச் செய்யும் ஒரு முஸ்லிமின் வைரல் பதிவு குறித்து ஜாய்ஸ் விசாரணை
October 11, 2026, 9:34 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படக்கூடாது: ஜாஹித்
October 11, 2026, 9:13 am
புகைமூட்டம்: ஜொகூர் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மேலும் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது
October 10, 2026, 4:24 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வாரா?
October 10, 2026, 4:23 pm
