நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காம ஒதுக்கீடு 80 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ள அரசுக்கு மஹிமா நன்றி: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், பதிவுசெய்யப்பட்ட முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின்  பராமரிப்பிற்கான ஒதுக்கீடு 80 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது, மேலும் பல கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மஹிமா தலைவர் டத்தோ என். சிவக்குமார் கூறினார்.

கடந்த ஆண்டு 50 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த ஒதுக்கீடு இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டிருப்பது, அரசின் திட்டமிடலில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் தேவைகளுக்கும் கவனம் செலுத்தப்படுகிறது என்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.

வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும், பக்தர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கும், அத்துடன் சமய, சமூக நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுவதற்கும் இந்த ஒதுக்கீடு முக்கியமானது.

பதிவுசெய்யப்பட்ட முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையைக் கேட்டறிந்த அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிதி ஒதுக்கீடு பராமரிப்புப் பணிகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இந்த நாட்டில் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், பல்லின சமூகத்தின் நல்லிணக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

கூரை சேதம், மின்சார வயரிங், கழிப்பறைகள், வடிகால் அமைப்புகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த உதவியை பயன்படுத்தப்பட முடியும்.

ஆக முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காம ஒதுக்கீடு 80 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ள
அரசுக்கு நன்றி என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset